இராமாயணத்தில் வரும் 'தண்டகாரண்யம்' எங்கிருக்கிறது?

Dandakaranya forest
Dandakaranya forestImg Credit: Flickr

இராமர் தனது 14 ஆண்டு கால வன வாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குவனுடன் சில காலம் தண்டகாரண்யத்தில் கழித்தார் என இராமாயண இதிகாசம் கூறுகிறது.

இந்தத் தண்டகாரண்யத்தில் இருக்கும் போதுதான், மாரீசன் தங்க மான் வடிவில் உலாவினான். சீதை, அந்தத் தங்க மானை பிடித்துத் தரும்படி கேட்டதால், இராமன் மற்றும் இலக்குவன் என்று இருவரும் தங்க மானைத் தேடிச் சென்றனர். சீதை தனிமையில் இருக்கையில், அங்கு வந்த இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு போய், இலங்கையின் அசோக வனத்தில் சிறை வைத்ததாக இராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) என்பது அடர்ந்த காட்டுப்பகுதி என்றும், தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு என்றும் இரு விதமான பொருள் கொள்கின்றனர். இராமாயணத்தில் குறிப்பிடும் இந்தத் தண்டகாரண்யம் எனும் அடர்ந்த காடு, தற்போது எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியாக தண்டகாரண்யம் அமைந்திருக்கிறது. இக்காட்டிற்கு மேற்கே அபூஜ்மார் மலை, கிழக்கே கிழக்கு மலைத் தொடர். மேலும், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளை உள்ளடக்கியதாக தண்டகாரண்யம் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியப் பெருங்கடலும், ராஜேந்திர சோழனின் கடற்படையும்: ஒரு அலசல்!
Dandakaranya forest

2000 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவான போது, தண்டகாரணயத்தின் பகுதிகள் கங்கேர் (1999), தந்தேவாடா (2000) என்றிருந்தது. அதன் பின்பு பிஜப்பூர் (2007), நாராயண்பூர் (2007), கோண்டாகாவ் (2012), சுக்மா (2012) என்று தற்போது ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

தண்டகாரண்யம் வனப்பகுதியில் வாழும் மக்களில் நான்கில் மூன்று பங்கினர் மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆவர். அவர்களில் முக்கியமான பழங்குடி இனங்களாக, கோண்டு மக்கள், முரியாக்கள், ஹல்பாக்கள் மற்றும் அபுஜ்மரியாக்கள் என்று நான்கு பழங்குடியின மக்கள் இருக்கின்றனர்.

தண்டகாரண்யப் பகுதி நள வம்சம், நாகர்கள், காகதீய வம்சம், சாளுக்கியர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டது என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com