எந்தெந்த நாடுகளில் என்னென்ன பொருட்களுக்கு தடைன்னு பார்க்கலாமா?

Banned products
Banned products
Published on

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் உயிர் பாதுகாப்பு (Biosecurity), வெளிநாட்டு நோய்கள், பூச்சிகள் மற்றும் களைகளால் தங்கள் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்காக புதிய பூக்களை தடை விதிக்கின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் மல்லிகை பூவுக்கு தடை இருப்பதைப் போல வேறு எந்தெந்த நாடுகளில் என்னென்ன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆஸ்திரேலியா

புதிய பூக்களின் இறக்குமதிக்கு ஆஸ்திரேலியாவில் மிகக் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பூக்கள் மற்றும் இலைகள் மட்டுமே, அதாவது ஒரு சான்றிதழ் (Phytosanitary Certificate) மற்றும் பூச்சிகளை அழிக்கும் சிகிச்சை (fumigation) போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்ட இலைகள் மற்றும் பூக்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உண்டு. விதிகளை மீறி இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டிலும் அந்த நாட்டின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்க கடுமையான உயிர் பாதுகாப்பு விதிகளையும் புதிய பூக்களை இறக்குமதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளையும் ஆஸ்திரேலியாவை போலவே விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU)

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் இருந்து வரும் புதிய பூக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பூக்களுக்கு பூச்சி சான்றிதழ் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் சில குறிப்பிட்ட பூக்கள் மற்றும் செடிகளுக்கு முழுமையான தடையையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது.

அமெரிக்கா

புதிய பூக்களின் இறக்குமதிக்கு குறிப்பிட்ட விதிமுறைகளை அமெரிக்கா வகுத்துள்ளது. அனைத்து இறக்குமதி பொருட்களும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் பூச்சிகள் மற்றும் நோய்களை தடுக்க ஆய்வு செய்யப்படுகின்றன. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கிண்டர் ஜாய் சாக்லேட் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருளாக உள்ளது.

நேபாளம்

உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்க நேபாளம் போன்ற நாடுகள் குறிப்பிட்ட காலங்களில் உதாரணமாக காதலர் தினத்திற்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வரும் ரோஜாக்கள் போன்ற பூக்களை தடை செய்யும் கொள்கைகளை அமல்படுத்தியுள்ளது.

ரஷ்யா, சீனா

ரஷ்யா சீனா போன்ற நாடுகள் பன்றிகளின் இறைச்சிக்கு தடை விதித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் AI அமைச்சர்… அல்பேனியாவை ஊழல் இல்லா நாடாக மாற்ற ஒரு முயற்சி..!
Banned products

ஜப்பான் ஐரோப்பிய ஒன்றியம்

பச்சை நிறத்திலான ஒரு நிறுவனத்தின் குளிர்பானம், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய நாடுகள் அனைத்து உள்ளூர் விவசாய பொருளாதரத்தை பாதுகாப்பதற்காகவும் வெளிநாட்டு பூச்சிகள் மற்றும் நோய்கள் தங்கள் நாட்டின் சுற்றுப்புற சூழலை சேதப்படுத்தாமல் தடுப்பதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஆகவே இந்த நாட்டிற்கு செல்வதாக இருந்தாலும் அந்த நாட்டின் இறக்குமதி தடை குறித்த விவரங்களை தெரிந்து எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com