மகாத்மா காந்திஜி படத்திற்கு முன்னால் நம் ரூபாய் நோட்டில் யார் படம் இருந்தது?

மகாத்மா காந்திஜி படத்திற்கு முன்னால் நம் ரூபாய் நோட்டில் யார் படம் இருந்தது?

ன்றும் என்றும் நாம் போதும் என்று சொல்லாத ஒரே பொருள் பணம்தான். மனமில்லாமல் கூட இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். ஆனால்,பணம் இல்லாமல் வாழ்க்கை வாழமுடியாது என்பது இன்றைய உண்மை. இப்படிப்பட்ட பணத்தில் இருக்கும் ஒருவரது புகைப்படம் நம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கும். ஆம், நம் நாட்டு ரூபாய் நோட்டில் காணப்படும்  மகாத்மா காந்தியின் சிரித்த முகம்தான். 

மகாத்மா காந்திஜியின் படத்தை, ரூபாய் நோட்டில், எப்போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 1969 வருஷத்தில்தான், முதல் முறையாகக் காந்திஜியின் உருவம் பதித்த, நூறு ரூபாய் நோட்டுகள் அவருடைய, 100-வது பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்டது. அதன்பிறகு, 1987-ல், காந்திஜி உருவம் பதித்த, ஐந்நூறு ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. ஆனால், எல்லா ரூபாய் நோட்டுகளிலும் அச்சிடப் படவில்லை.கடைசியாக 1996-ல் இப்போது இருக்கின்ற மாதிரியான, காந்திஜி சீரிஸ் நோட்டுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) அறிமுகப்படுத்தினார்கள்.

காந்திஜியின் படம் பதிப்பதற்கு முன்பாக, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்த, ரூபாய் நோட்டுகளில் எல்லாம், இங்கிலாந்து அரசர், ஐந்தாம் ஜார்ஜ் உடையப் படம்தான் இருந்தது. அதன்பிறகு வந்த, ரூபாய் நோட்டுகளிலெல்லாம், அசோக சின்னத்தை முன்புறத்திலும் ,ஆரியப்பட்டா சேட்டிலைட், தஞ்சாவூர் பெரிய கோயில், கேட் வே ஆஃப் இந்தியா ஆகியவை ரூபாய் நோட்டின் பின்புறத்திலும் பெரும்பான்மையாகப் பயன்படுத்தினார்கள். இப்படிப் பல பரிணாமங்களை அடைந்து காந்திஜியின் புகைப்படத்துடன் இன்று நம் கைகளிலும் வங்கிக் கணக்குகளிலும் புழங்குகிறது இந்திய ரூபாய் நோட்டுகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com