தேசியக் கொடிகளும், தீர்க்கப்படாத ஊதா நிற மர்மமும்!

No purple colour in flag
Purple colour mysteryCredits: AI Image
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

லகத்தில் உள்ள எந்த நாட்டு கொடியிலாவது ஊதா நிறத்தை பார்த்திருக்கிறீர்களா? ஏன் ஊதா நிறம் கொடிகளில் (Purple colour mystery) பயன்படுத்தப் படுவதில்லை என்பது தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம். 

ஒரு நாட்டினுடைய முக்கியமான அடையாளமாக தேசியக்கொடி கருதப்படுகிறது. அதைத்தான் கடற்படை, ராணுவம், கோட்டைகள், எல்லைகள் என்று எல்லா இடங்களிலும் பறக்க விடுவார்கள். இதனால் தேசிய கொடி எளிதில் டேமேஜ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அத்தோடு கடலுக்கு அருகில் பறக்கவிட்டாலும் உப்புக்காற்று மற்றும் வெயிலுக்கு மங்கி போகாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். போர் ஏற்படும் போது கொடிகள் அதிகம் சேதமாகும். இதனால் லட்சக்கணக்கான கொடிகளை தயாரிக்க வேண்டிவரும். 

19 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் ஊதா நிறம் இயற்கையான முறையில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. லெபனான் என்னும் நாட்டில் Murex என்ற கடல் நத்தை இருந்தது.அதிலிருந்து தான் ஊதாநிறம் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு கிராம் ஊதாநிறத்தை தயாரிக்க 10,000 நத்தைகள் தேவைப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் ஊதாநிறத்தின் விலை தங்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. இதனால் ஊதா நிறம் செல்வம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. அரச குடும்பங்கள் மட்டுமே இதை பயன்படுத்தினார்கள். சாதாரண மக்களுக்கு இந்த ஊதாநிறம் ஒரு எட்டாக்கனியாகவே இருந்தது. 

ஊதா நிறம் தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால், அந்த காலத்தில் மன்னர்கள், ராணிகள் மற்றும் மிகவும் செல்வந்தர்கள் மட்டுமே இந்த நிற ஆடைகளை அணிந்தனர். எனவே இது ஒரு 'அரச நிறமாக' கருதப்பட்டது. ஒரு நாட்டின் கொடிக்காக லட்சக்கணக்கான மீட்டர்கள் ஊதா துணியை தயாரிப்பது என்பது அந்த காலத்தில் பொருளாதார ரீதியாக சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது.

இதனால்தான் கொடிகளில் ஊதா பயன்படுத்தவில்லை. லட்சக்கணக்கான கொடிகளை தயாரிக்கும் போது விலை மலிவாக இருக்கக்கூடிய. சிவப்பு, நீலம், வெள்ளை இதுப்போன்ற நிறங்களை தான் பயன்படுத்தினார்கள். 1856 ஆம் வருடம் William Henry Perkin என்பவர் செயற்கையாக ஊதாநிறத்தை கண்டுப்பிடுத்துவிட்டார். அதற்கு பிறகு ஊதா நிறம் மலிவானதாக மாறினாலும் தேசிய கொடி மாற்றிக்கொண்டேயிருக்கும் விஷயம் இல்லை என்பதால் ஊதா நிறத்தை யாருமே கொடிகளில் பயன்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்:
காஞ்சிப் பட்டு: வெறும் ஆடையல்ல, அது தமிழர்களின் கலை அடையாளம்!
No purple colour in flag

பெரும்பாலான நாடுகள் தங்களது கொடிகளை 1850-களுக்கு முன்பே வடிவமைத்துவிட்டன. செயற்கை சாயம் வந்த பிறகு புதிய நாடுகளும், ஏற்கெனவே இருந்த நாடுகளும் தங்கள் கொடிகளை மாற்ற விரும்பவில்லை. தற்போது உலகில் 190 க்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. இருப்பினும் 2 நாடுகள் Dominica and Nicaragua மட்டுமே அவர்கள் கொடியில் கொஞ்சமாக ஊதா நிறத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com