காஞ்சிப் பட்டு: வெறும் ஆடையல்ல, அது தமிழர்களின் கலை அடையாளம்!

Kanji silk sarees
Kanji silk sarees
Published on

காஞ்சிபுரம் பட்டு தமிழ்நாட்டில் பாரம்பரிய மிக்க கைத்தறி நெசவு தொழிலாகும். உயர்தர மல்பெரிப்பட்டு தங்கம் வெள்ளி ஜரிகை வேலைபாட்டுடன் நெய்யப்பட்டு பின் இணைக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற 400 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைக் கொண்டுள்ளது. கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் அடையாளமாகும். உடல் பார்டர் பல்லு ஆகிய மூன்று பகுதிகள் தனித்தனியாக நெய்யப்பட்டு பிறகு கைகளால் இணைக்கப்படுகிறது

சுத்தமான பட்டு நூல் மற்றும் வெள்ளி விலை தங்கம் மூலம் பூசப்பட்ட ஜெரி பயன்படுத்தப்படுகிறது. கோவில் கோபுரங்கள் மயில் அன்னம் வடிவமைப்புகள் பார்டர்களில் பிரத்தியேகமாக நெய்யப்படுகிறது. முறுக்கு பட்டு என அழைக்கப்படும் தடிமனான வலுவான பட்டு ரகம் இங்கே சிறப்பாக நெய்யப்படுகிறது.

2008 தரவுகளின்படி சுமார் 5000 குடும்பங்கள் பல கூட்டுறவு சங்கங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

போலி பட்டுப்புடவைகளால் இங்குள்ள நெசவாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டு உற்பத்தி செய்யும் முறை:

உயர்தர மல்பெரி பட்டு நூல்களை சுத்தப்படுத்தப்பட்டு வேக வைக்கப்படுகின்றன பட்டு நூல்களுக்கு துடிப்பான நிறங்களில் சாயம் இடப்படுகிறது பாரம்பரிய குழி தறி அல்லது சட்டத்தறி மூலம்

நெய்யப்படுகிறது. நுணுக்கமான ஜரி வேலைப்பாடுகள் இதன் மூலம் செய்யப்படுகிறது. பின்னர் உடம்பு மட்டும் பார்டர் இணைக்கப்படுகிறது. கடைசியில் கழுவி கஞ்சி போட்டு மெருகூட்டப்படுகிறது

இந்தப் புடவைகளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேச பெண்கள் திருமண புடவைகளாக அணிகிறார்கள். 2005 ஆம் ஆண்டு அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது. காஞ்சிபுரத்தில் 2008 படி 25 பட்டுபருத்தி தொழிற் சாலைகளும் 60 சாயம் இடும் ஆலைகளும் உள்ளன. தென்னகத்தின் திருமணம் சடங்கு மற்றும் சுபநிகழ்ச்சிகளில் காஞ்சிபுரம் பட்டு சேலை இல்லாமல் முழுமை அடையாது.

இதையும் படியுங்கள்:
பாலே முதல் பெல்லி டான்ஸ் வரை: மேற்கத்திய நடனக் கலைகளின் வர்ணஜாலம்!
Kanji silk sarees

பனாரஸ் புடவை பட்டோலா புடவைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு காஞ்சிபுரம் பட்டு சேலை முதலிடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலை உலகம் முழுவதும் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பட்டுச்சேலைகள் கோவில்களில் நெய்யப்பட்டது. புடவை பார்டர்களில் ருத்ராட்சம் மயில் குயில்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய புடவையில் எம்ராய்டரி கிறிஸ்டல் வேலைகள் செய்யப்படுகின்றன.

பழங்கால ஓவியங்கள் சிற்பங்கள் தெய்வங்கள் ஆகியவை பட்டுப் புடவைகளில் நெய்யப்பட்டு வருகின்றன. திரவ தங்கத்தில் வெள்ளி சேர்க்கப்படுகிறது. தங்க ஜரிகை சூரத்தில் இருந்து வருகிறது.

மல்பெரி பட்டு நூல்கள் கர்நாடகாவில் இருந்து வருகிறது. பட்டு உலகில் உலக அளவில் காஞ்சிபுரம் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்தியாவில் அசாம் மேற்கு வங்காளம் இந்த இடங்களில் பட்டு உற்பத்தி நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் மட்டும் 24 கூட்டுறவு சங்கங்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 50 ஆயிரம் நெசவாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு 200 கோடி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சில யூனிட்டுகள் பட்டு சுடிதார் செய்யும் வேலையில் இறங்கி உள்ளனர்.

டிசைன் செய்வதில் தற்போது கம்ப்யூட்டர் பயன் படுத்தப்பட்டு வருகிறது. தங்கம் வெள்ளி ஜரிகை இல்லாமல் பட்டுச்சேலைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. தகவல் மதிப்பீட்டு கவுன்சில் சேலையில் உள்ள தங்கம் வெள்ளி தரத்தை சரி பார்க்கிறது. இங்குள்ள சங்கங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இதற்கு மத்திய புவியியல் அடையாள பதிவகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

பட்டுச்சேலைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சின்னம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு பட்டுப்புடவை செய்ய மூன்று ஷட்டில்கள் பயன்படுத்தப் படுகின்றன.

நெசவாளர் வலது பக்கத்தில் வேலை செய்யும்போது அவரது உதவியாளர் இடப்பக்கத்தில் ஷட்டில் வேலை செய்கிறார்.

இதையும் படியுங்கள்:
ஆரஞ்சு பழத்தோலை உரமாகப் பயன்படுத்துவது எப்படி? - முழுமையான வழிகாட்டி!
Kanji silk sarees

பட்டுச் சேலைகளின் முந்தி நிழலில் நெய்யப்பட வேண்டும். அதன் பின்னர் முந்தியை புடவையுடன் இணைக்கின்றனர். உடல் பெரும்பாலும் ஜிக்ஜாக் கோட்டால் குறிக்கப்படுகின்றது. புடவை கிழிந்தாலும் பார்டர் கிழியாத அளவுக்கு வலுவாக நெய்யப்படுகிறது.

ராஜா ரவி வர்மா ஓவியங்கள், மகாபாரதம், ராமாயணம், இதிகாச கதைகள் ஓவியங்கள் நெய்யப்படுகின்றன. கனமான பட்டு சேலை தங்கச் ஜரிகை நெய்யப்பட்ட புடவைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட்டுப் படவைபோது வாங்கும்போது கனமாக இருக்கவேண்டும். காஞ்சிபுரம் பட்டு என்றாலே தனி மவுசுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com