

அந்தந்த நாட்டின் பண்பாடு, கலை கலாசாரத்தை விளக்கும் வகையில் உலகின் பத்து உயர்ந்த சிலைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சர்தார் வல்லபாய் படேல் சிலை - இந்தியா
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய, இந்திய முதல் துணைப் பிரதமராகத் திகழ்ந்த சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தில் நர்மதா நதிக்கரையில் குஜராத்தில் உள்ளது. இது தேசிய ஒற்றுமைக்கு சின்னமாக விளங்குகிறது.
2. ஸ்ப்ரிங் புத்தர் சிலை - சீனா
இந்த புத்தர் சிலை செம்பால் ஆனது. இது சீனாவின் ஃபோகுவான் கோவில் அருகே உள்ளது.128 மீட்டர் உயரம் கொண்டது. இந்த சிலைக்காக 100 கிலோ தங்கமும், 3300 டன் செம்பு மற்றும் 1000 டன் ஸ்டீல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தாமரை வடிவு போன்ற மேடையில் செம்பு உலோகத்தில் இது ஜொலிக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயர்ந்த சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
3. லாக்யூம் செக்யா (Laykyun Sekkya) - மயன்மார்
மியன்மாரில் கடன் டாங் என்ற பகுதியில் மிக உயரமான புத்தர் சிலை உள்ளது. இந்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலையாகக் கருதப்படுகிறது. இதன் உடல் தங்கத்தகடுகளால் ஆனதால், சூரிய வெளிச்சத்தில் தகதகக்கிறது. 2008 ம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த சிலை புத்தமதத்தவர்களுக்கு புனித பயண இடமாகக் கருதப்படுகிறது.
4. விச்வரூப சிவன் சிலை - இந்தியா
நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படும் சிவனின் விச்வரூபசிலை ராஜஸ்தானில் நாத்வாரா பகுதியில் உள்ளது. இது 106 மீட்டர் உயரமான சிலையாகும். 2022 ல் நிறுவப்பட்டது. 3000 டன் இரும்பு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்க்ரீட் மற்றும் மணல் பயன்படுத்தி இச்சிலை அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில் சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டதால், இரவிலும் காணலாம். இந்த பிரம்மாண்ட சிலையில் 4 லிஃப்டுகள், 3 படிக்கட்டுகள் மற்றும் பக்தர்களுக்கான அரங்கம் ஆகியவை உள்ளன. இதில் ஈசன் தவம் செய்யும் கோலத்தில் உள்ளார். கையில் சூலத்தை வைத்து காணப்படுகிறார். கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு மையமாக இது திகழ்கிறது. இது ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது.
5. உஷிகு தைபுட்சு (Ushiku Daibutsu) - ஜப்பான்
அமிதவ புத்தர் சிலை என்று இதைக் கூறுவார்கள். 1993 ஆண்டு ஜப்பானிய புத்தமதத்தைத் தோற்றுவித்த ஷின்ரன் நினைவாக இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 100 மீட்டர் உயரம் கொண்ட இது வெண்கலச் சிலையாகும். இதன் அடித்தளம் பத்து மீட்டர் அளவு உள்ளது. இதன் முகம் மட்டுமே 20 மீட்டர் நீளம் உள்ளது. இதன் கண்கள் 2. .55 மீட்டர் நீளமும், 4.5 மீட்டர் வாயும், கொண்டது. இதன் கைகள் 18 மீட்டர் நீளம் உள்ளன. இது சுமார் 4003 டன் எடை கொண்டது. இந்த சிலை அழகிய தோட்டங்களுக்கு நடுவே நிறுவப்பட்டுள்ளது. சிலையின் உட்புறம் 4 அடுக்குகள் உள்ளன. இதன் நான்கிலும் மியூசியம் உள்ளன. இரண்டாவது அடுக்கில் 3000 தங்க புத்தர் சிலைகள் உள்ளன. இந்த புத்தரைப் சுற்றி குளம், மரங்கள், பூக்களை உடைய செடிகள் மற்றும் தோட்டங்களும் பெரிய அளவில் அமைந்துள்ளன.
6. கைஷன் கானின் (Guishan Guanin) - சீனா
சீனாவில் உள்ள இச்சிலை 99 மீட்டர் உயரம் உள்ளது. போதிசத்வ அவலோகேஷ்வர என்ற இந்த சிலைக்கு, 11தலைகளும், 1000 கைகளும் உள்ளன.
இது இனியவை உணர்த்தும் நிலையாகும். இது 2009 ல் அமைக்கப்பட்டது. புனித இடமாகக் கருதி யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள். சீனாவில் சிறந்த ஆன்மிக நினைவுச் சின்னமாக கருதப்படுகிறது.
7. ஆசியாவின் தாய் - ஃபிலிப்பைன்ஸ்
மரியா சிலை என்று கூறப்படுகிற இது ஃபிலிப்பைன்சில் 98 மீட்டர் உயரம் உள்ளது. ஆசியாவின் ஒற்றுமை மற்றும் அமைதியின் அடையாளமாக திகழ்கிறது. இங்கு வழிபாட்டு மையம், ம்யூசியம் போன்றவைகள் உள்ளன. ஃபிலிப் பைன்ஸ் நாட்டு இந்தச் சிலை வழிபாட்டு மையமாக விளங்குவதால், யாத்ரீகர்கள் வருகிறார்கள்.
8. புத்தர் - தாய்லாந்து
அமர்ந்த கோலத்தில் உள்ள இந்த புத்தர் சிலை 1900லிருந்து 2008 வரை கட்டி நிறுவப்பட்டுள்ளது. 92 மீட்டர் உயரமான இது தங்கத்தால் உருவானது. இது 5.5 டன் எடை கொண்டது. இச்சிலை வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் அதன் உண்மையான மதிப்பை பிறர் அறியாமல் மறைக்கும் விதமாக அதன்மீது சாந்து பூசி சாதாரண சிலையாக ஆக்கப்பட்டது. 200 ஆண்டுகள் இந்த நிலையில் இருந்த இது 1955ல் இந்தச் சிலையை இடம் மாற்ற முயன்றபோது அதன் பூச்சு உடைந்து தங்கம் வெளியே தெரிந்தது.
பாங்காக்கின் இரண்டாம் இராமா காலத்தில் வாட் சோட்டா நகரம் என்ற இடத்தில் இந்த சிலையை நிறுவினார். 1954ல் இதன் மேல்பூச்சு உடைந்து தங்க புத்தரை அடையாளம் காட்டியது. இந்த புத்தர் சிலைக்காக பெரிய கோவில் கட்டப்பட்டது.
9. சென்டால் டைக்னான் (Sendal Daikannon) - ஜப்பான்
92 மீட்டர் உயரமான இந்த போதிசத்வ புத்தர் சிலை கருணையின் வடிவமாகக் கருதப்படுகிறது.1991 ல் நிறுவப்பட்டது. இது உள்ளது ஜப்பானில்.
10. ஹொகெய்டோ - ஜப்பான்
இந்த சிலை 1989 ல் நிறுவப்பட்டது. இதன் உள்ளே 12 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் கோவில் உள்ளது. தியானம் செய்யக்கூடிய இடங்களும் உள்ளன. மன அமைதியை தரக்கூடிய இடமாக விளங்குகிறது. இது 88 மீட்டர் உயரமான நிலையாகும். இந்த சிலை தாமரை வடிவு கொண்ட அமைப்பின் மீது நிறுவப்பட்டுள்ளது. குளிர் காலங்களில் இது பனியால் மூடப்பட்டிருக்கும். இதை சுற்றியுள்ள இடங்களிலிருந்து இந்த புத்தர் சிலையை ரசிக்க முடியும்.