மகாராணி வூ - உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரியாக இருந்த சீன பெண்மணி!

Wu Zetian
Wu Zetian
Published on

உலக பணக்காரர்கள் என்றால் எலான் மஸ்க், அம்பானி, வாரன் பஃபே, ஜெஃப் பெசாஸ் ஆகியோர் நம் நினைவிற்கு வருவார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் சீனாவில், வூ செடியான் என்கிற மகாராணி இவர்களை எல்லோரையும் விட மிகுந்த பணக்காரியாக வாழ்ந்திருக்கிறார். அமேரிக்கா டாலர் 16 ட்ரில்லியன் அளவு சொத்துக்களை பெற்றிருந்தார்.

மகாராணி வூ என்று அழைக்கப்பட்ட இவர், உலகிலேயே மிகவும் பணக்கார ராணியாகக் கருதப்பட்டார். சீன சரித்திரத்தில் இவர் முக்கிய இடம் பெற்றுள்ளார். வூ அவர்கள் ஒரு பெரிய பணக்கார மரவியாபாரியின் பெண்ணாவார்.

இவருக்கு சிறு வயதிலேயே புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். இவரது 14 வயதில் அரசர் காவோசாங்கின் செக்ரடரியாக இருந்தார். இந்த அரசர் 649 ADயில் இறந்து விட, அவரைச் சார்ந்த அனைத்து பெண்மணிகளும் புத்த மடத்திற்கு அனுப்பபட்டார்கள். இந்த அரசரின் மகன் காவோசாங்கிற்கும் வூ விற்கும் தொடர்பு ஏற்பட்டது. காவோசாங் அரசரான பிறகு வூவை பௌத்த மடத்திலிருந்து வரவழைத்து தன் ஆசை நாயகியாக்கினார்.

வூ தன்னை நன்கு நிலைநாட்டிக் கொள்ள முயன்றபோது, வூ மற்றும் மகாராணி வாங்க் இடையே பெரிய சண்டை ஏற்பட்டது. தான் பெற்ற பெண் குழந்தை இறந்து விட, வூ, அதற்குக் காரணம் மகாராணி வாங்க் தான் என பழி போட்டார்.

வாங்க்கின் வீழ்ச்சிக்குப் பிறகு வூ 655 ம் ஆண்டில் மகாராணியாக ஆக்கப்பட்டார். ஐந்து வருடங்களில் அரசர் காவோசாங்கிற்கு தலைவலி நோயால் கண் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனால் அரசை அவர் வூவிடம் ஒப்படைத்தார். வூ பல முறை கேடான வழிகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 657 ம் ஆண்டு காவோசாங் மன்னரின் மகன் இறந்தார். இதற்குக் காரணம் வூ தான் என்று சொல்லப்பட்டது.

தன்னை காக்க பல மரணங்களுக்கு இவர் காரணமாக இருந்தார். இவருடைய சாமர்த்தியமான நடவடிக்கைகளால் இவருக்கு மரியாதை ஏற்பட்டது. 683 ம் ஆண்டு காவோசாங் இறந்த பிறகு, 15 ஆண்டுகள் தொடர்ந்து ராணியாக இருந்தார். இவருடைய ஆட்சியில் பொருளாதாரம் உயர்ந்தது.

இவரைப்பற்றி பல டிவி தொடர்கள் வந்துள்ளன. 2015 ம் ஆண்டில் எம் ப்ரெஸ் ஆஃப் சைனா என்ற படம் இவரைப்பற்றி எடுக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய பணக்கார ராணியாக வாழ்ந்தவர் என்று இவர் அறியப்படுகிறார். இவருடைய ஆட்சியில் தேயிலை மற்றும் சில்க் தொழில் உச்சத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வூ மகாராணி இன்றைய பணக்காரர்களை விட பல மடங்கு பணக்காரியாக அன்றே திகழ்ந்தார் என்பது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
நாவில் எச்சில் ஊறவைக்கும் தொக்கு வகைகள் செய்து அசத்துவோமா?
Wu Zetian

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com