அன்பால் தூய்மையடையுங்கள்!

அன்பால் தூய்மையடையுங்கள்!

பத்து தூய்மைகள்!

1. உடல் தூய்மை

ம்முடைய உடலைத் தூய்மைப்படுத்த மூன்று வழிகள் உள்ளன. முதல் நிலை நீராடல், இரண்டாவது நிலை ஆரோக்கியமான உணவு, மூன்றாவது நிலை போதிய உடற்பயிற்சி. 

நீர் நம்முடைய புற அழுக்குகளை நீக்கும். ஆரோக்கிய மான உணவுகளால் நம் உள்ளுறுப்புகள் சுத்தமடையும்.

உடற்பயிற்சி நம்முடைய உடலை உறுதியாக்கி நலமாக வைத்துக் கொள்ள உதவும்.

2. சுவாசத் தூய்மை 

பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுவாசம் சீராக இருக்கும். இதன் மூலம் நமக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படாது தவிர்க்கலாம்.

3. மனத் தூய்மை 

தியானங்களில் ஈடுபடுவதால், நம்முடைய மனம் தெளிவான ஒரு நிலையை அடைகின்றது. இதனால் நம்முடைய மனத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தூய்மை பெறும்.

4. அறிவுத் தூய்மை

நாம் இவ்வுலகிற்கு வந்ததே நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ளத்தான். நிறைய நல்ல செய்திகளைக் கேட்பதாலும், படிப்பதாலும் நாம் ஞானத்தைப் பெறுகிறோம்.  இதனால் நம்முடைய அறிவு மூடத்தனங்களில் இருந்து விடுபட்டுத் தூய்மை அடைகின்றது.

5. நினைவாற்றல் தூய்மை 

ப்போதும் பிறர் நமக்கு செய்த தீமைகளை மறந்து விடவேண்டும்.

மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை என்றுமே மறக்கக் கூடாது. இதுவே நம்முடைய நினைவாற்றலைத் தூய்மைப்படுத்த இயலும்.

6. செயல் தூய்மை 

ம்முடைய எண்ணங்கள் எப்போதுமே நம் செயல்களாக உருவெடுக்கின்றன.

நாம் செய்யும் செயல்கள் எல்லாம் இறைவனுக்குச் செய்வதைப் போலவே எண்ணிச் செய்ய வேண்டும். எதையும் பாரமாகவோ, விருப்பமில்லாமலோ செய்யக் கூடாது. 

தன் நலம் கருதாது, எல்லாவுயிர்களும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நம் செயல்களைச் செய்வதே செயல் தூய்மை.

7. ஆத்ம தூய்மை 

ப்போதும் கோபப்படக்கூடாது. அதேவேளை, அதிக ஆர்ப்பாட்டமும் செய்யக்கூடாது.

துன்பமாக இருந்தாலும், பேரின்பமாக இருந்தாலும் ஒரே நிலையான அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே தூய்மையான ஆத்மாவை உறுதி செய்யும்.

8. உணவுத் தூய்மை 

மைக்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் நல்ல எண்ணங்கள் கொண்டிருக்க வேண்டும். அதிகமான இனிப்பு, காரம், உப்பு என்று இல்லாமல் எதிலும் அளவோடு சேர்க்கவேண்டும்.

பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மிகுதியாக உண்ண வேண்டும். இதுவே நாம் உண்ணும் உணவுகளின் தூய்மையை உறுதி செய்யும்.

9. பொருள் தூய்மை 

ம்மிடம் பொருட்செல்வம் கொட்டிக் கிடந்தாலும் அல்லது ஏழையாக இருந்தாலும், எப்போதும் மற்றவர்க்கு கொடுத்து உதவுவதை நாம் விரும்பவேண்டும்.

ஒருவருக்கு நல்ல புத்திகளைச் சொல்வது கூட தானம் என்றே சொல்லப்படுகின்றது.

செல்வம் உடையவர்கள் தங்களால் முடிந்தவரை, ஏழை எளிய குழந்தைகளுக்குத் தேவையானவற்றை அளித்து உதவலாம்.

இதுவே நம்மிடம் உள்ள செல்வங்களின் தூய்மையை நிலைப்படுத்தும்.

10. உள்ளுணர்வு தூய்மை 

ம்முடைய உள்ளுணர்வுகள் அன்பால் தூய்மை அடைகின்றன.

எப்போதும் எல்லா உயிர்களிடமும் நாம் அன்பாக இருக்கவேண்டும்.

யாரையும் வெறுக்கக் கூடாது, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் இல்லாமல் எல்லோரையும் சரி சமமாக நேசித்தலே உள்ளுணர்வைத் தூய்மைப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com