

அட நம்புங்க ! ஈஸியா தங்க நகை கிப்ட் கொடுக்கலாம். அருமையான ஒரு கிராம் தங்க நகை டிசைன்கள்.
உயர்ந்து கொண்டே வரும் தங்க விலையின் காரணமாக சொந்த தேவைகளுக்கு தங்கம் வாங்குவதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகின்றனர். அதிலும் தங்க நகைகள் பரிசளிப்பதை முற்றிலும் மறந்து போய்விட்டனர் என்று அடித்துக் கூறலாம். ஆனாலும் ஒரு கிராம் தங்கத்தில் அழகான தங்க நகைகளை சொந்த தேவைகளுக்காகவும் பரிசு பொருளாகவும் வழங்க முடியும். அத்தகைய தங்க நகை டிசைன்களை இப்பதிவில் காண்போம்.
ஒரு கிராம் தங்க தோடுகள்
காதோடு ஒட்டி காணப்படும் சிறிய ஸ்டட் தோடுகளை ஒரு கிராம் தங்கத்தில் அழகாக செய்யலாம். பொதுவாக இதனுடைய எடை 0.7 முதல் 0.8 கிராம் வரை இருக்கும். எடை குறைந்த இந்த ஒரு கிராம் தங்க ஸ்டட் கம்மல்கள் அணிவதற்கு வசதியாக இருப்பதால் குழந்தைகளுக்கும் , டீன் ஏஜ் பெண்களுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சிம்பிளான ஒரு கிராம் தங்க மோதிரம்
பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தை வழங்கும் மோதிரத்தை ஒரு கிராம் தங்க நகையில் செய்வது புத்திசாலியான முடிவாக இருக்கும். ஏனெனில் இந்த மோதிரம் அணிவதற்கு ஏற்றதாகவும் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும். அதிக டிசைன் இல்லாமல் இருப்பதால் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் செய்வதற்கு விலை குறைவாகவும் இருக்கும். இதனுடைய எடை 0.8கிராம் முதல் 1கிராம் வரை இருக்கும்.
பாரம்பரிய தங்க மூக்குத்தி
ஒரு கிராம் தங்கத்தில் பாரம்பரியமான தங்க மூக்குத்தி செய்வது மிகச் சிறந்ததாக இருக்கும். இதன் எடை வெறும் 0.5 முதல் 0.8 கிராம் மட்டுமே இருப்பதால் டீன் ஏஜ் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும். விலை குறைவாகவும் பார்ப்பதற்கு அருமையாகவும் இருக்கும் தங்க மூக்குத்திகள் ஒரு கிராம் தங்க நகைகளிலேயே மிகச் சிறந்த தேர்வாக உள்ளன.
ஒரு கிராம் சிறிய பென்டன்ட் அல்லது லாக்கெட்
ஒரு கிராம் தங்கத்தில் பூ ,இதயம், இனிஷியல் அல்லது பெயர் போன்ற சிம்பிளான டிசைன்கள் கொண்டு லாக்கெட் அல்லது பென்டன்டை எளிதாக செய்யலாம். ஸ்பெஷலான இந்த பென்டன்டை எல்லா செயினுடனும் அணியலாம். இதனுடைய எடை 1 கிராம் முதல் 1.2கி வரை இருக்கும்.
மேற்கூறிய தங்க நகைகளை பரிசு கொடுக்கும் போது பரிசு கொடுப்பவரும் பெறுபவரும் மன மகிழ்ச்சியுடன் நிறைவாக இருப்பதை கை மாறும்போது முகத்தைப் பார்த்து உணர்ந்து கொள்ள முடியும்.