ஆலோவேரா எனப்படும் கற்றாழை பலவிதமான அழகு நன்மைகளைக் கொண்ட பிரபலமான இயற்கை தாவரமாகும். அதன் அழகு நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. நீரேற்றம் மற்றும் ஈரப்பதம்
கற்றாழையில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஒரு சிறந்த மாய்ஸ ரைஸராக இருக்கிறது. இது சருமத்தை கிரீம் உபயோகிக்கும் தேவையின்றி, இயற்கையாகவே ஈரப்பதமாக்குகிறது. எண்ணெய் அல்லது வறண்ட சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது.
2. குளிர்ச்சித் தன்மை
கற்றாழை குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. இதை முகத்தில் தேய்க்கும் போது சருமத்தின் மேல் ஒரு பாதுகாப்பு அடுப்பை உருவாக்கி ஈரப்பதத்தை முகத்திற்கு அளிக்கிறது. இதனால் வெளியில் செல்லும்போது சூரிய ஒளி பட்டு முகம் கருப்பதை தடுக்கிறது.
3. முகப்பருக்களை அகற்றுகிறது
கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு பருக்களால் உண்டாகும் வீக்கம், முகம் சிவத்தல் போன்றவற்றையும் குறைக்கிறது. இதன் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. முகப்பருவால் ஏற்படும் வடுக்களையும் குறைக்க உதவுகிறது.
4. தோல் எரிச்சலைக் குறைத்தல்
சிலருக்கு வெயிலில் செல்லும்போது முகம் எரிச்சல் அடைய ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கு அரிக்கும் தோல் அழற்சி மற்றும் சோரியாசிஸ் போன்ற தோல் நிலைகளால் ஏற்படும் எரிச்சலை கற்றாழை தணிக்கிறது
5. இளமைத் தோற்றம்
கற்றாழையில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி மற்றும் விட்டமின் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தின் இயற்கைத் தன்மையையும் நெகிழ்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைத்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கிறது. இதில் உள்ள கொலாஜன் பண்புகள் முதுமையின் வரவை தாமதப்படுத்தி, சருமத்தின் எலாஸ்டிசிட்டியை மேம்படுத்தி இளமை தோற்றத்தை அளிக்கிறது.
6. கரும்புள்ளிகள் நீக்கம்
கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது தோலில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்குகிறது. சரும செல்களுக்கு உயிரூட்டி பளபளப்பாக வைக்கிறது.
7. கருவளைய சிகிச்சை
பலருக்கும் கண்களுக்கு அடியில் கருவளையம் இருக்கும். அது முகத்தின் அழகை கெடுக்கும். கற்றாழையின் சாற்றை கண்களுக்கு அடியில் தடவினால் அதன் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் கருவளையம் மறைந்துவிடும்.
8. சருமப் பளபளப்பு
கற்றாழையில் இயற்கையான என்சைம்கள் உள்ளன. அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி மிருதுவான பொலிவான நிறத்தை தருகிறது. சருமத்தை பிரகாசமாக பளபளக்கச் செய்கிறது.
9. தலைமுடி ஆரோக்கியம்
கற்றாழை தலைமுடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது சிலருக்கு உச்சந்தலையில் ஏற்படும் பொடுகுகள் காரணமாக முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு போன்றவை இருக்கும் கற்றாழையை தோல் சீவி அதன் ஜெல்லை உச்சந்தலையில் தொடர்ந்து பயன் படுத்தி வரும்போது அரிப்பை குறைத்து பொடுகை குறைத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் முடிக்கற்றைகள் உடைவதையும், முடி உதிர்தலையும் குறைக்கும். முடி வளர்ச்சி ஊக்குவிக்கும்.
10. இயற்கை ஒப்பனை நீக்கி
மேக்கப்பை நீக்குவதற்கு கற்றாழை ஜெல் பயன்படுகிறது. இதன் மென்மையான ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்து இயற்கையாக முகத்தின் ஒப்பனையை நீக்கலாம். இது சருமத்தை சுத்தமாகவும் நீரேற்றம் ஆகவும் மாற்றும் சக்தி படைத்தது.