
தேன், ப்ரௌன் சர்க்கரை ஸ்க்ரப்
தேன் ஈரப்பதத்தைத்தரும் சர்க்கரை உதட்டை வறண்ட நிலையிலிருந்து மென்மையாக்கும். ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ப்ரௌன் சுகரைக் கலந்து உதட்டில் தடவிக் கழுவ உதடு மென்மையாகும்.
காஃபி,ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்
அரை டீஸ்பூன் காஃபிபௌடர் மற்றும் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கலந்து உதட்டில் தடவ காஃபி நல்ல இரத்த ஓட்டத்தைத் தரும். ஆலிவ் ஆயிலின் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் இரண்டும் உதட்டை பளபளக்கும் செய்யும்.
தேங்காய் சீனி, வெண்ணிலா ஸ்க்ரப்
ஒரு டீஸ்பூன் தேங்காய் சீனியுடன் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணை மற்றும் ஒரு சொட்டு வெண்ணிலா சென்ஸ் சேர்த்து கலக்கவும். தேங்காய் எண்ணையில் லாரிக் அமிலம் உதட்டில் வெடிப்புகளை நீக்கும் வெனிலா சென்ஸ் பொலிவைத்தரும்.
பீட்ரூட், சீனி
அரை டீஸ்பூன் பீட்ரூட் ஜுசுடன் ஒரு டீஸ்பூன் சீனி மற்றும் சிலசொட்டு ஆல்மண்ட் ஆயில் சேர்த்துக்கலந்து பூச, சீனி இறந்த செல்களை நீக்கும. பீட்ரூட் நல்ல நிறம்தரும். ஆல்மண்ட் ஆயில் ஈரப்பதத்துடன் வைக்கும்.
புதினா, சீனி ஸ்க்ரப்
ஒரு டீஸ்பூன் புதினா ஜுசுடன் அரை டீஸ்பூன் சீனி மற்றும் ஒரு சொட்டு பெப்பர் மிண்ட் ஆயில் சேர்த்து உதட்டில் தடவிக் கழுவ மிகப் பொலிவாக ஆகும்.
ஸ்ட்ராபெரி, தேன் ஸ்க்ரப்
ஒரு டீஸ்பூன் ஸ்ட்ராபெரி ஜுசுடன் அரை டீஸ்பூன் தேன் மற்றும் சீனி சேர்த்து உதட்டில் தடவி நல்ல பிங்க் நிற உதடு கிடைக்கும்.
எலுமிச்சை, சீனி ஸ்க்ரப்
ஒரு டீஸ்பூன் சீனியை ஒரு டீஸ்பூன் எலுமிச்சை ஜுசுடன் கலந்து தடவிக் கழுவ இறந்த செல் நீங்கி ஈரப்பதத்துடன் உதடு பளபளக்கும்.
ரோஜா இதழ்கள், பால்
பால் விட்டு ரோஜா இதழ்களை அரைத்து உதட்டில் பூச உதடு மென்மையாவதுடன் ரோஜா நிறமாகும்.
கோகோ, சீனி ஸ்க்ரப்
அரை டீஸ்பூன் கோகோ பௌடருடன் அரை டீஸ்பூன் சீனி மற்றும் தேங்காய் எண்ணை சேர்த்து தடவ உதடு மிகப்பொலிவாக்கும்.
மஞ்சள், தேன் ஸ்க்ரப்
ஒரு சிட்டிகை மஞ்சள் பௌடருடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சீனி சேர்த்து தடவ தேன் நல்ல எக்ஸ்ஃபோலியேட்டாகச் செயல்படும். மஞ்சள் அழற்சியை போக்கி வெடிப்புகளையும் நீக்கி உதட்டை பொலிவாக்கும்.