
சருமத்திற்கு மெருகூட்ட முல்தானி மிட்டி மிகச்சிறந்த ஒன்றாகும். இது மினரல்கள் நிறைந்த களிமண்ணாகும். இதில் மக்னீசியம், சிலிகா மற்றும் கால்சியம் நிறைந்தது. சருமத்தை சுத்தப்படுத்துவதோடு நீரேற்றமாக வைக்கிறது.
இதன் பயன்கள்.
இது ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டாகச் செயல்பட்டு இறந்த செல்களை நீக்கி முத்துவாரங் களையும் நீக்குகிறது. இதைப் பயன்படுத்துவதால் முகம் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியுடன் விளங்குகிறது.
இதற்கு ஆயிலை உறிஞ்சக்கூடிய பண்பு இருப்பதால் எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு ஏற்றது. இது எண்ணெய்ப் பசையை நீக்கி பளபளப்பாக வைக்கிறது.
முகத்தில் கருமை மற்றும் கரும் திட்டுக்கள் ஏற்படாமல் காக்கிறது. முகம் வெயிலால் கருமை ஆவதை தடுக்கிறது.
முகப் பருக்களை நீக்குவதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. முகத்தில் அழற்சியை போக்கி முகத்துவாரங்களை திறக்கவும் மற்றும் எண்ணை பசையை நீக்கி முகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கிறது. மாசு மருவற்ற முகத்திற்கு வழி செய்கிறது.
இதன் குளுமைப் பண்பு அரிப்பு அழற்சியைப் போக்கி வெயிலின் அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சில் இருந்து காக்கிறது.
முல்தானிமிட்டி மற்றும் தேன் பேக்.
மிகவும் வறண்ட முகம் உள்ளவர்களுக்கு ஏற்ற பேக் இது. இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துத் கழுவவும். இது முகத்தை நீரேற்றமாக வைப்பதுடன் மிருதுவாகவும் ஆக்குகிறது.
முல்தானி மிட்டி மற்றும் யோக்ஹர்ட்
முகத்தை மென்மையாக்கும் முகத்தில் வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும் இரண்டு டேபிள்ஸ்பூன் மூல்தானிமிட்டி ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜுஸ் மற்றும் யோக்ஹர்ட் சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துத்கழுவவும். ஜொலிக்கும் முகம் பெறலாம்.
முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
எண்ணை பசை மற்றும் பருக்கள் பிரச்னை உள்ளவர் களுக்கு ஏற்றது இந்த பேக். எண்ணை பசையை நீக்கி பருக்களை போக்கி முகத்தை பளபளப்பாக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானிமிட்டி,ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு டீஸ்பூன் வேப்பிலை பொடி சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவவும்.
முல்தானி மிட்டி மற்றும் தக்காளி ஜுஸ் பேக்
நல்ல நிறமும் பளபளப்பும் தரக்கூடியது. இறந்த செல்களை நீக்கி முகப்பொலிவைக் கூட்டும் பேக் இது. இரண்டுடேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி ஜுஸ் மற்றும் தேன்கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
முல்தானி மிட்டி மற்றும் ஆலோவேரா பேக்
உங்கள் முகம் டல்லாக இருந்தால் இது பளிச்சென்று ஆக்கும். முகப் பொலிவு அதிகரிக்கும் இரண்டு டேபிள்ஸ்பூன் மூல்தானிமிட்டி ஒரு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி இவற்றைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.