கோடைக்காலத்திற்கேற்ற காட்டன் புடவைகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான 1௦ விஷயங்கள்!

choosing cotton sarees
கோடைக்கால வெயிலுக்கு...
Published on

வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் கோடைக் காலத்தில் பெண்கள் காட்டன் புடைவைகளைத்தான் அணிய விரும்புவார்கள். சமையலறையில் மிகுந்த சூட்டில் சமைக்கும்போதும், அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் பஸ்ஸிலும் ரயிலிலும் டூவீலரிலும் பயணம் செய்யும்போது உடுத்திக் கொள்ளவும் மிகவும் வசதியாக இருப்பது காட்டன் புடைவைகளே.

வெயில் காலத்தில் அணிவதற்கேற்ற காட்டன் புடைவைகளை கடைகளில் சென்று வாங்கும் போதும், அவற்றைத் தேர்ந்தெடுக்கும் போதும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த எட்டு விஷயங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

1. துணி வகை; 

கைத்தறிக் காட்டன், பெங்கால் காட்டன், கோட்டா காட்டன், சந்தேரிக் காட்டன் அல்லது மல்காட்டன் போன்ற புடைவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை இலகு ரகமாகவும் சுவாசிக்க கூடியதாகவும் இருக்கும் பருத்தி வகைகள் ஆகும் இந்தத் துணிகள் சிறந்த காற்று சுழற்சியை அனுமதிக்கிறது. மேலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதை அனுமதிக்கிறது. அணிந்திருப்பவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கும்.

2. வண்ணத் தேர்வு; 

கோடைக்காலத்தில் அணிவதற்கேற்ற வெளிர் நிறங்களை தேர்வு செய்ய வேண்டும். அடர்ந்த நிறங்கள் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும். வெளிர் நேரத்தில் உள்ள புடவைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது சூரிய ஒளியையும் வெப்பத்தையும் பிரதிபலிக்கும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். வெள்ளை, கிரீம், பேபி பிங்க், ஸ்கை ப்ளூ, புதினா பச்சை அல்லது எலுமிச்சை மஞ்சள் போன்ற வெளர்நிறங்கள் உகந்தவை. கோடைக்கால வெயிலுக்கு மிகவும் ஏற்றவை.

3. அச்சுகள் மற்றும் வடிவங்கள்; 

நுட்பமான பிரிண்ட்கள், மென்மையான மையக்கருக்கள் அல்லது கோடுகள் மற்றும் செக்குகள் போன்ற குறைந்தபட்ச வடிவமைப்புகள் உள்ள சேலைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கனமான எம்ப்ராய்டரி டிசைன்களை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தோல்வி தரும் பாடமே வெற்றியின் படிக்கட்டுகள்!
choosing cotton sarees

4. நெசவு மற்றும் அமைப்பு

சேலைகள் மென்மையான அமைப்பை கொண்டிருப் பதையும் எளிதான டிசைன்கள் உள்ளதாகவும் இருக்க வேண்டும். கையால் நெய்யப்பட்ட சேலைகள் பெரும்பாலும் நீண்ட நேரம் அணிந்திருக்கும் போதும் சௌகரியமாக இருக்கும். இவை இயற்கையான பூச்சுக் கொண்டவை. தளர்வான நெசவு சிறந்த காற்றோட்டத்தை அனுமதிக்கிறது. இவற்றை அணிந்திருக்கும்போது குளிர்ச்சியாக உணரவைக்கும். 

5. வியர்வையை உறிஞ்சும் திறன்; 

ஈரப்பதமான சூழ்நிலைகளில் தோல் எரிச்சலை தடுக்க அதிக வியர்வையை உறிஞ்சும் திறன்கொண்ட தூய பருத்தி அல்லது கலவைகளால் செய்யப்பட்ட சேலைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். 

6. பராமரிப்பு

பராமரிக்க எளிதாக இருக்கும் புடைவைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பெரும்பாலான பருத்திப் புடைவைகளை அவற்றின் அழகை இழக்காமல் கையால் துவைக்கலாம். சிலவற்றை இயந்திரத்திலும் துவைக்கலாம். கோடை மாதங்களில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும்.

7. நம்பகத்தன்மை

நூறு சதவீதம் தூயபருத்தி அல்லது கைத்தறி சான்றளிக்கப்பட்டது போன்ற சொற்கள் இருக்கும் லேபிளை சரி பார்த்து துணியின் தூய்மையை சரி பார்க்க வேண்டும். உண்மையிலேயே சுவாசிப்பதற்கு ஏற்ற, சருமத்திற்கு ஏற்ற புடைவைகளை அணிய விரும்பினால் செயற்கை கலவைகளை தவிர்க்கவேண்டும். 

இதையும் படியுங்கள்:
பற்களில் உள்ள கறையைப் போக்க சிறந்த வழிமுறைகள்!
choosing cotton sarees

8. பொருத்தமான ரவிக்கைகள் 

 புடவைகளுக்கு ஏற்ற பொருத்தமான ரவிக்கைகளை அணிய வேண்டும் இவை நன்கு சுவாசிக்க கூடிய வகையில் இருக்கும். துணியால் செய்யப்பட்ட பிளவுஸ்களை தேர்வு செய்யவேண்டும்.

கோடைக்கால வெயிலுக்கு...
கோடைக்கால வெயிலுக்கு...

9. பொருத்தம்

தினசரி உபயோகத்திற்கும் விசேஷ காலங்களுக்கும் அணியக்கூடிய வகையில் பல்துறை பாணிகளை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக சந்தேரி பருத்திப் புடவைகளை தினசரி உபயோகத்திற்கும் அலுவலக உபயோகத்திற்கும், அதே சமயத்தில் பண்டிகை நிகழ்வுகளுக்கும் உடுத்திக் கொள்ளலாம். அதேபோல மல் காட்டன் சாதாரண பயணங்களுக்கு ஏற்றது. 

1௦. தவிர்க்க வேண்டிய நிறங்கள்;

கறுப்பு, டார்க் ப்ளூ, டார்க் ப்ரவுன், அடர் சிவப்பு போன்ற நிறங்களில் இருக்கும் காட்டன் புடைவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெப்பத்தை உறிஞ்சிக்கொண்டு, உடலுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com