தோல்வி தரும் பாடமே வெற்றியின் படிக்கட்டுகள்!

The lessons of failure are the steps to success!
Motivational articles
Published on

ரு மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுப்பது தோல்வி மட்டுமே. தோல்வி என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு நாம் வரும் பொழுதுதான் நல்ல சிந்தனைகள் தோன்றும் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க நாம் தயாராகுவோம். வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், ஒரு வருடத்தின் பருவங்கள். அது போலத்தான் மனித வாழ்விலும் சுகமும், துக்கமும் வந்து போகும். முள் செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்? கல்லில் கால் படாமல், முள்ளில் வதை படாமல். ஒருக்காலும் முன்னேற்றம் அடைய முடியாது.

உயர்வின் உச்சியிலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர்களின் உயரத்தை மட்டுமே நம்மில் பலர் எண்ணி வியக்கின்றோம். ஆனால் அந்த நிலைக்கு உயர அவர்கள் பட்ட துன்பங்களையும் எடுத்த தொடர் முயற்சிகளையும் எண்ணிப் பார்ப்பது இல்லை.

எத்தனையோ கல்லடி, சொல்லடி, ஏச்சுக்கள், ஏளனம் போன்ற எதிர்ப்புகளை பொறுமையோடும், நம்பிக்கையோடும், உறுதியோடு சமாளித்ததால்தான் இன்று பலர் வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

சுடச்சுடத் தான் தங்கம் ஒளிரும்; பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஒளி வீசும். அதுபோல நம்மை வருத்தும் துயரம் எல்லாம் நம்மை பக்குவப்படுத்தி சிறந்த மனிதனாக உருவாக்குகின்றது.

இதையும் படியுங்கள்:
கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
The lessons of failure are the steps to success!

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முட்டுக்கட்டைகளை சாதுரியமாக எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வேண்டும்.

ஒருமுறை தாமஸ் ஆல்வா அவர்களை சந்தித்த நண்பர்கள் பலர் இவரது வெற்றியைப் பாராட்டினார்கள். 

அவர்களில் ஒருவர் எடிசனிடம்,

”நீங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகளைச் செய்து முடிவில்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். 

1000 முறை தோற்றபோது உங்களது மனம் மிகவும் வருத்தப்பட்டிருக்கும். தோல்விகள் உங்கள் முயற்சிகளை தடை செய்து இருக்கும் அல்லவா” என்று கேட்டார். தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக் கொண்டே அந்த நண்பருக்குப் பதில் தந்தார்.

”நான் எனது தோல்விகளைப் பற்றி கவலைப்படவே இல்லை. எனது சோதனைகள் தோல்வியடையும் போதெல்லாம் நான் ஒரு சோதனையை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

அந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். அந்தத் தோல்விகள்தான் எனக்குத் தொடர்ந்து முயற்சி செய்யும் சக்தியைத் தந்தன. இப்போது நான் வெற்றி பெற்றிருக்கிறேன்” என்று பதில் தந்தார்.

தோல்விகளும் வெற்றியைப்போல் மனிதர்களுக்கு வாழ்க்கையில் அவ்வவ்போது ஏற்படும் அனுபவங்கள்.

தோல்வியை சவால்களாக பாவித்து அதை எதிர்கொண்டு தன்வசப்படுத்தி வெற்றி கண்டு வாழ்வதில்தான் வாழ்க்கையில் சுவாரசியமே அடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அசைபோடுவதும், ஆசைப்படுவதும் அவசியம் முன்னேறுவதற்கே..!
The lessons of failure are the steps to success!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com