பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேண்ட் பேக்குகள்!

Bags...
Bags...Image credit - pixabay

பெண்கள் அழகாக ஆடை அணிவதுடன் அதற்கு பொருத்தமான கைப்பைகள் வைத்திருப்பது அவர்கள் தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கும். விதவிதமான கைப்பைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

1. தோள் பை (Shoulder bag) 

Shoulder bag
Shoulder bagImage credit - pixabay

கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும்போது மிகவும் இன்றி அமையாத பொருள் ஷோல்டர் பேக் எனப்படும் தோளில்  தொங்கவிடக்கூடிய பை. இது மிகவும் பெரியதாக கனமாக இல்லாமல் அதில் நிறைய பொருட்களை வைத்து அழுத்தாமல் அளவான சைஸில் இருப்பது அவசியம். 

2. குறுக்கே மாட்டும் பை; (Cross body bag) 

Cross body bag
Cross body bagImage credit - pixabay

இது சிறிய அளவில் இருக்கும். இந்தப் பையில் அத்தியாவசிய பொருள்களை வைத்துக் கொள்ளலாம். மொபைல் ஃபோன், பணம் மற்றும் கார்டுகள் வைத்துக் கொள்ளலாம். தோளின் குறுக்கே மாட்டி வயிற்றில் தொங்குவது போல அமைந்திருக்கும். 

3. டோட் பை; (Tote Bag)

Tote Bag
Tote BagImage credit - pixabay

இது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கைப்பை வகைகளில் ஒன்று இதில் பல அறைகள் இல்லாமல் ஒரே ஒரு காம்பார்ட்மெண்ட்டை மட்டும் கொண்டு கொண்டிருக்கும். இது உபயோகிக்க மிகவும் எளிதானது.

4. Back pack bag

Back pack bag
Back pack bagImage credit - pixabay

முதுகுப்புறத்தில் மாட்டக்கூடிய பையிது. தோளில் மாட்டக்கூடிய பையை விட வசதியானது. ஏனென்றால் இதில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்லும்போது தோள்பட்டை வலியோ முதுகு வலியோ வராது. இதில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை கிடைக்கிறது. பெரிய சைஸ் பைகளில் கல்லூரிக்கு செல்லும் போது நோட்டுகள், புத்தகங்கள் மற்றும் டிபன் பாக்ஸ் வைத்துக் கொள்ளலாம் சிறிய சைஸ் பையென்றால் அதில் மொபைல் போன் மற்றும் மற்றும் சில பொருட்களை வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
துன்பத்தை வரவேற்போம்!
Bags...

5. ஈவினிங் கிளட்ச் (Evening clutch) 

Evening clutch
Evening clutchImage credit - pixabay

சிறப்பு சந்தர்ப்பங்களுக்கான இந்தப் பையில் பொதுவாக பெண்கள், மேக்கப் பொருட்களான லிப்ஸ்டிக், காஜல், டிஷ்யூக்கள் போன்றவற்றை வைத்துக் கொள்வார்கள். இது பார்க்க வசீகரமாக இருக்கும்.

6. மணிக்கட்டுப் பை; (Wrist bag)

 Wrist bag
Wrist bag Image credit - amazon

இது பிரேஸ்லெட் அணிந்து கொள்வதைப் போல, மணிக்கட்டில் தொங்கும் மிக சிறிய அளவில் இருக்கும். சாவி, லிப் பாம், பணம் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம்

7. ஹோபோ பை (Hobo bag)

Hobo bag
Hobo bagImage credit - amazon

பிறை வடிவத்தில் உயரம் குறைவாக அமைந்துள்ள இந்தப் பை ஒரே ஒரு காம்பார்ட்மெண்ட்டுடன் இருக்கும். இது ஷாப்பிங் செய்யும் போது எடுத்து செல்ல ஏற்றது.

8. பெல்ட் பேக்

belt bag
belt bagImage credit - amazon

இந்த வகையான பைகள் பெல்ட்டை போலவே இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். இது தற்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது பார்க்க மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கும். சாதாரண உடைகளுடன் கூட மிக அழகாக பொருந்தும். இவற்றில் செல்போன் மற்றும் பணம், கார்டு வைத்துக் கொள்ளலாம்.

9. வட்ட வடிவ பை (Round bag) 

Round bag
Round bagImage credit - amazon

சணல், துணி அல்லது தோலில் தயாரிக்கப்படும் இந்த வகையான பைகளுக்கான தேவை அதிகம். வட்ட வடிவமான குறுக்குப்பை ஆகும். விமானத்தில் பயணிக்கும் போது பெண்களுக்கு மிகவும் ஏற்றது. போர்டிங் பாஸ் மற்றும் அடையாள அட்டைகளை  வைத்துக் கொள்ள துணை புரியும்.

10. கூடைப்பை (Basket bag)

Basket bag
Basket bagImage credit - amazon

சணல் துணியால் தயாரிக்கப்படும் இந்தப் பை கையில் பிடித்து கொண்டு செல்லும் வகையில் கூடை போன்ற வடிவத்தில் இருக்கும். நீடித்து உழைக்கும். தண்ணீர் பாட்டில், ஸ்னாக்ஸ் எல்லாம் வைத்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com