2026-ல் உலகையே ஆளப்போகும் 'ஆன்டி-ஃபிட்' ஃபேஷன்... இனி ஸ்லிம் ஃபிட் ஆடைகளுக்கு குட்-பை!

பெரும்பாலானோர் 'ஆன்டி-ஃபிட்' என்பதைத் தளர்வான ஆடைகள் என்று மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஃபேஷன் நிபுணர் நேஹா சொல்வது என்ன?
2026 fashion anti fit dresses
2026 trendy fashion anti fit dressescredit pinterest

2026-ம் ஆண்டில் உலகம் முழுவதும் டிரெண்டாகி வரும் ஒரு முக்கியமான ஃபேஷன் மாற்றம் 'ஆன்டி-ஃபிட்' ஆடைகளை அணிவதுதான். இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, உடலுக்குச் சுதந்திரம் கொடுப்பதே உண்மையான ஃபேஷன் என்ற கருத்தை இது முன்வைக்கிறது.

1. ஆன்டி-ஃபிட் என்றால் என்ன?

anti fit dress
anti fit dress credit pinterest

பொதுவாக ஆடைகள் உடலின் வடிவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தைக்கப்படும். ஆனால், ஆன்டி -ஃபிட் என்பது அதற்கு நேர் மாறானது. இது உடலுக்கும் ஆடைக்கும் இடையே போதிய இடைவெளியை உருவாக்கி, அணிவதற்கு அதிக வசதியையும் பார்ப்பதற்கு ஒரு தனித்துவமான 'லுக்'கையும் தருகிறது.

பெரும்பாலானோர் 'ஆன்டி-ஃபிட்' என்பதைத் தளர்வான ஆடைகள் என்று மட்டும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஃபேஷன் நிபுணர் நேஹா , "இது ஒரு கலைநயமிக்க வடிவமைப்பு. தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் கச்சிதமாகப் பொருந்தி இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் தளர்வாக இருப்பதே சரியான ஆன்டி-ஃபிட். இது உடலின் குறைகளை மறைத்து, அதே சமயம் ஒரு நேர்த்தியான 'லுக்'கைத் தரும்," என்கிறார்.

2. பெண்களுக்கு ஏற்ற ஆன்டி-ஃபிட் ஆடைகள்:

anti fit  kurti
anti fit kurticredit pinterest

பெண்களைப் பொறுத்தவரை, ‘ஆன்டி-ஃபிட்’ குர்த்திகள் மற்றும் ஏ-லைன் ஆடைகள் ஒரு வரப்பிரசாதம். அலுவலகம் செல்லும் பெண்கள் காலை முதல் மாலை வரை ஒரே ஆடையில் இருக்கவேண்டியுள்ளது. ‘ஆன்டி-ஃபிட்’ குர்த்திகள் காற்றோட்டமாக இருப்பதால், கோடை காலங்களிலும் அல்லது நீண்ட நேர வேலைகளின் போதும் சோர்வடையச் செய்யாது. இது உடலின் குறிப்பிட்ட பகுதிகளை இறுக்கிக்காட்டாமல் தளர்வாக இருப்பதால், எந்த உடல்வாகு கொண்ட பெண்களும் இதைத் தன்னம்பிக்கையுடன் அணியலாம்.

3. ஓவர்சைஸ் சட்டை மற்றும் டி-சர்ட்கள்:

oversized t-shirt
oversized t-shirtcredit pinterest

இவை தோள்பட்டையில் தளர்வாக விழுந்து, முழங்கை வரை நீண்ட கைகளுடன் இருக்கும். 'பாய்ஃப்ரெண்ட் ஷர்ட்' என்று சொல்லப்படும் இந்த ரகங்கள், இறுக்கமான ஜீன்ஸிற்குப் பதில் தளர்வான பேண்ட்களுடன் அணியப்படுகின்றன. இது ஒரு கூலான 'கேஷுவல்' தோற்றத்தைத்தரும்.

4. மேக்ஸி மற்றும் ட்ரேப் ஆடைகள்;

maxi dress
maxi dresscredit pinterest

உடலின் வடிவத்தை அப்படியே காட்டாமல், துணிகள் மடிப்புகளாக விழுந்து உடலைச் சுற்றி தளர்வாக இருக்கும் ஆடைகள் இவை. குறிப்பாக காதி மற்றும் லினன் துணிகளில் தைக்கப்படும் மேக்ஸி ஆடைகள் இப்போது மிகவும் பிரபலம்.

5. அகலமான பேன்ட்கள்:

oversized pant
oversized pant credit pinterest

இடுப்பில் மட்டும் சரியாகப் பொருந்தி, கீழே செல்லச் செல்ல அதிக அகலத்துடன் இருக்கும் பேன்ட்கள் ஆன்டி-ஃபிட் ஸ்டைலின் முக்கிய அங்கம். இவை நடக்கும்போது ஒருவித மிதக்கும் உணர்வைத்தரும்.

6. கோட் மற்றும் ஷ்ரக் ரகங்கள்:

oversized blazer
oversized blazercredit pinterest

முறையான பிளேசர்கள் (Blazers) போலல்லாமல், தோள்பட்டை இல்லாத, தளர்வான துணியால் ஆன மேலங்கிகள். இவை எந்த ஒரு சாதாரண உடைக்கும் சட்டென்று ஒரு 'ஸ்டைலிஷ்' லுக் கொடுத்துவிடும்.

7. ஜம்ப் சூட்கள்:

oversized jumpsuit
oversized jumpsuitcredit pinterest

இடுப்புப் பகுதியில் எலாஸ்டிக் அல்லது பெல்ட் இல்லாமல், மேலிருந்து கீழ் வரை ஒரே சீரான தளர்வுடன் இருக்கும் ஜம்ப் சூட்கள். இவை பயணங்களின் போது அணிவதற்கு மிகவும் வசதியானவை.

8. ஆண்களுக்கு: பாக்ஸி ஃபிட் சட்டைகள்: boxy shirt

boxy shirt
boxy shirtcredit pinterest

இவை தோள்பட்டையில் சரியாகப் பொருந்தி, இடுப்புப் பகுதியில் சதுர வடிவில் தளர்வாக இருக்கும். இது ஒருவருக்கு அகலமான தோற்றத்தையும், அதேசமயம் ஒரு வித ரிலாக்ஸான ஸ்டைலையும் தருகிறது.

9. வைட்-லெக் பேண்ட்கள்:

wide leg pant
wide leg pantcredit pinterest

முழங்காலுக்குக் கீழே அகலமாக இருக்கும் இந்த ரக பேண்ட்கள், பழைய காலத்து 'ரெட்ரோ' ஸ்டைலை நவீன மெருகூட்டலுடன் மீண்டும் கொண்டு வந்துள்ளன. இது நடக்கும்போது ஒரு கம்பீரமான அசைவைத் தருகிறது.

10. ஆன்டி-ஃபிட் ஆடைகள் அணிவதன் சௌகரியம்:

Anti-fit clothing
Anti-fit clothingcredit pinterest

உடல் நலத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் ஏற்ற காற்றோட்டமான மற்றும் வசதியான தோற்றத்தை இது வழங்குகிறது. அனைத்து உடல்வாகிற்கும் ஏற்றது. உடல் எடையைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் அழகாகக் காட்டுவதோடு, சரியான அணிகலன்களுடன் பயன்படுத்தும்போது நவீன ஆளுமையைத் தருகிறது. நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட இந்த ஆடைகள், நிலையான ஃபேஷன் கலாச்சாரத்தை ஊக்குவித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com