நேர்காணலுக்கு செல்லும் போது நாம் எப்படி உடை அணிந்து செல்கிறோம், நம்முடைய தோற்றம் எப்படி உள்ளது போன்ற விஷயங்கள் வேலை நமக்கு கிடைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அதிலும் நம்முடைய சிகை அலங்காரம் நேர்த்தியாக இருக்கும் போது அது நிறுவன அதிகாரிகள் மீது நல்ல தாக்கத்தை செலுத்துகிறது. எனவே, நேர்காணலுக்கு செல்லும் பெண்கள் எதுப்போன்ற சிகை அலங்காரத்தை செய்துக் கொண்டு செல்வது சிறந்தது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நீங்கள் மிகவும் குறைந்த நேரத்தில் செய்துக் கொள்ளக் கூடியதும், பார்ப்பதற்கு தொழில்முறை தன்மையோடு அழகான தோற்றத்தை அளிப்பதுமான மூன்று எளிய கூந்தல் அலங்காரங்களை பார்ப்போம்.
குதிரைவால் சிகை அலங்காரத்தை சரியான முறையில் அமைத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காரத்திற்கு நேர்த்தியான தோற்றம் தேவை. ஆன்டி பிரிஸ் கிரீமை தலைமுடி முழுவதும் தடவிக் கொள்ளவும். தலைமுடி முழுவதும் இறுகப்பற்றி குதிரைவாலாக்கி உங்களுக்கு வேண்டிய உயரத்தில் போட்டுக் கொள்ளலாம்.
அலுவலக நோக்கிலான உடைகளுக்கு கொண்டை கச்சிதமாக பொருந்தக்கூடிய கூந்தல் அலங்காரம். இதில் காற்றில் முடி பறப்பது போன்ற பிரச்னைகள் கிடையாது. கழுத்து அளவில் தாழ்வான கொண்டை அமைத்துக்கொள்வது, சிக்கென நவீனத்தன்மையோடு இருக்கும். அதேநேரம் தொழில்முறைதன்மையையும் கொண்டிருக்கும்.
இந்த தோற்றம் பெற தலைமுடி அனைத்தையும் வாரி தலைமுடியை ஒன்றாக்கி கழுத்து அளவில் குதிரைவாலாக்கிக் கொண்டு பின்பு அதை சுருட்டி கொண்டையாக்கிக் கொள்ளவும்.
இந்த கூந்தல் அலங்காரம் மிகவும் நேர்த்தியாக தோன்றக் கூடியது. இது உடனடியாக தொழில்முறை தோற்றம் தரக்கூடியது. இந்த எளிமையான கூந்தல் அலங்காரத்துடன், கண் அலங்காரம், Nude lipstick அணிந்துக்கொண்டால் அசத்தலாக இருக்கும். இந்த தோற்றம் பெற தலைமுடியை டிரையர் கொண்டு காயவைத்து கீழ்ப்பகுதியில் சுருள் முடியை உருவாக்கி கொள்ளவும். சீப்புக்கொண்டு முன்பக்க முடியை அமைத்துக் கொண்டு அதை பின்பக்கமாக இழுத்து பின்குத்திக் கொள்ளவும்.