மனிதர்களுக்கு இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறமையும், பகுத்தறிவும் சிந்திக்கும் திறனும் உள்ளன.
ஆனால், மனிதர்களைப் போலவே ஒரு சில விலங்குகள் சிந்தித்து முடிவுகளை எடுக்கின்றன. மேலும், அவற்றால் மனிதர்கள் செய்யக்கூடிய பல விஷயங்களைச் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள 10 மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளை பற்றி பார்ப்போமா....
யானைகளுக்கு பதினொரு பவுண்டுகள் எடையுள்ள மூளை உள்ளது. அவற்றின் மூளை திறனால், அவை தகவல்களைச் சேமித்து பல ஆண்டுகளாக விஷயங்களை நினைவில் வைத்திருக்கும்.
ஐபோன் அல்லது ஐபேடை (I Phone or I Pad) விட பூனைகள் 1,000 மடங்கு அதிக தரவு சேமிப்பிடத்தைக் (data storage) கொண்டுள்ளன.
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் பழகுவது போலவே நாய்களும் மனிதர்களுடன் பழகுகின்றன. தன்னை வளர்ப்பவருக்காக உயிரைக் கூட கொடுக்க தயங்காதவை இந்த நாய்கள். இவை நன்றி மறவாத விலங்குகள். இவற்றிற்கு மோப்ப சக்தி மிக அதிகம்.
குரங்குகள் குழந்தைகளைப் போலவே புத்திசாலிகள். இவைகளின் செயல்கள் கிட்டதட்ட மனிதர்களைப் போலவே இருக்கும். மனிதர்களைப் போல கைகளால் உணவை எடுத்து உண்ணும்.
அணில்கள் தங்கள் உணவுப் பொருட்களை காப்பாற்றுவதற்காக போலி குழிகளை உருவாக்கி அங்கே உணவுகள் வைத்திருப்பது போல் நாடகமாடி திருடர்களை நம்ப வைக்கும். இது ஒரு சிறிய விலங்கு என்றாலும் இதற்கு புத்திகூர்மை மிகுதியாக இருக்கிறது.
நீர்நாய்கள் கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்றாகும். இவைகள் மேஜையில் உட்கார்ந்து சாப்பிடுவது, கோப்பைகளை அடுக்கி வைப்பது, பாறைகளைப் பயன்படுத்தி மட்டிகளைத் திறப்பது போன்ற செயல்பாடுகளை மனிதர்களை போன்று கற்றுக் கொள்கின்றன.
பென்குயின்கள் பனிக்கட்டியில் உறைவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்ச்சியடையும் இரத்தத்தின் அளவைக் குறைப்பதற்காக, பென்குயின்கள் அவற்றின் கைகால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
கடல் பாலூட்டிகளில் ஓர்காஸ் இரண்டாவது பெரிய மூளையைக் கொண்டுள்ளது. இதன் மூளை 15 பவுண்டுகள் வரை எடையுள்ளதாக இருக்கிறது. ஓர்காஸ் உண்மையில் டால்பின்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம்! இவையும் டால்பின் குடும்பத்தை சேர்ந்த மிகப்பெரிய இனமாகும்.
டால்பின்கள் 'கடலின் புத்திசாலிகள்' என அழைக்கப்படுகின்றன. இவை தனக்குத் தானே எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றன. மேலும் இவை தங்கள் அறிவை மற்றவர்களுக்கும் கடத்துகின்றன
எட்டு கைகள், மூன்று இதயங்களை கொண்ட இவை மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன. ஆக்டோபஸ்கள் வீட்டுப் பூனைகளைப் போலவே புத்திசாலிகள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்தி அறியும் அபாரமான திறனைக் கொண்டுள்ளன.