
ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆளிவிதை, நல்ல நீரேற்றத்தைத் தரக்ககூடிய சியா விதை மற்றும் துத்தநாகம் நிறைந்த பூசணி விதை இவை மூன்றும் கலந்த பானம் முகத்தின் பொலிவை கூட்டும்.
தேவையானவை
ஒரு டேபிள் ஸ்பூன் ஆளிவிதை
ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதை
ஒரு டேபிள் ஸ்பூன் பூசணி விதை
300 மிலி சுத்தமான தண்ணீர்
அரை எலுமிச்சை ஜுஸ்
ஒரு டீஸ்பூன் தேன்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
முதல்நாள் இரவே ஆளிவிதை, சியாவிதை மற்றும் பூசணி விதையை ஊற வைக்கவும். மறுநாள் இதை கொரகொரப்பாக அரைக்கவும். இதை வடிகட்டி அதில் தேன், மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் குடிக்கலாம்.
இதன் பயன்கள்
ஆளிவிதை நல்ல நீரேற்றத்தைத் தரும். சியா விதைகளும் நல்ல நீரேற்றம் தந்து கொலாஜனை அதிகரித்து செல்களை ஆரோக்கியமாக வைக்கும். விதைகளின் வைட்டமின் ஈ மற்றும் மஞ்சளின் குர்குகுமின் ஃப்ரீ ராடிகல்களின் சேதத்தை தடுத்து முகக் கோடுகளை தடுக்கும்.
எலுமிச்சையின் ஆஸ்கார் பிக் அமிலம் முகக் கருமையை நீக்கும். தேன் அழற்சியைப் போக்கி முகப் பருக்களை தன் தடுக்கும். விதைகளின் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முகம் சிவத்தலைத் தடுக்கும். மூன்று விதைகளின் நார்ச்சத்துக்களும் சருமத்தை இளமையாக வைக்கும்.
எந்த வித கெமிகல் இல்லாத இந்த பானம் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை எந்த வித பக்க விளைவுகளும் இன்றி முகத்தைப் பொலிவாக்கும். முகம் பட்டு போல் மென்மையாகும். எளிமையான இந்த பானத்தை அருந்தி முக அழகைக் கூட்டலாம்.