வழுக்கைப் பிரச்னை ஒரு தீர்க்க முடியாத பிரச்னையாக மக்கள் கவலை கொள்கின்றனர். அழகான ஆடை அலங்காரங்களுடன் ஒப்பனை செய்துக் கொண்டாலும், முடி இருந்தால்தான் பார்ப்பதற்கு அழகாக தெரிவதாக கூறுகின்றனர். வார்த்தையை போல, முடியும் கொட்டிவிட்டால் மீண்டும் பெற முடியாதோ? என்ற அச்சம் அவர்களிடையே இருந்து வருகிறது.
வழுக்கை விழுவதற்கான முக்கிய காரணம்:
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் இந்த மூன்றும்தான் முதுமையில் வழுக்கை விழுவதற்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக, செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறைந்துவிடும். இது தலைமுடிக்கும் பொருந்துவதால் ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும்.
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும். இது பெரும்பாலும் பரம்பரை காரணமாகவே வருகிறது. எனவே, இதைத் தடுக்க முடியாது. ஆனால், சீக்கிரத்தில் வழுக்கை விழுவதைத் தள்ளிப்போடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
முடி கொட்டிய இடத்தில் மீண்டும் முடி வளர இதை செய்து பாருங்கள்:
குமட்டி காய்
வழுக்கைப் பிரச்னையை குணப்படுத்த குமட்டி காய் உதவியாக இருக்கும். இது குமிட்டி, குமுட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய் கசப்பு தன்மை கொண்டது. அதே போல் பல்வேறு நோய்களை விரட்டவும் மருத்துவ ரீதியில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
குமட்டி காய் பயன்படுத்தும் முறைகள்
டிப்ஸ் 1: குமட்டி காயை இரண்டு பாகமாக வெட்டி வழுக்கை விழுந்த பகுதிகளில் வைத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு எப்பொழுதும் போல் குளித்து விடுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
டிப்ஸ் 2: இந்த குமட்டி காயை தீயில் நன்கு வாட்ட வேண்டும். அப்போது அந்த காயிலிருந்து வழியும் சாறை வழுக்கை விழுந்த பகுதிகளில் எடுத்து நன்கு தேய்க்க வேண்டும். இதனையும் வாரம் இருமுறை பயன்படுத்தினால் போதுமானது, விரைவில் அதன் பலனை நம்மால் பார்க்க முடியும்.
டிப்ஸ் 3: குமட்டி காயை நன்றாக அரைத்து தலை முழுவதும் தேய்க்க வேண்டும். இப்படி செய்வதனால் பொடுகு, பேன் தொல்லையால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்னை தீர்ந்துவிடும். உதிர்ந்த இடத்தில் மீண்டும் புது முடியின் வளர்ச்சியையும் பார்க்க முடியும்.
டிப்ஸ் 4: குமட்டி காயை நன்கு அரைத்து இளஞ்சூடான தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி எடுத்து வைத்து கொண்டு, தினமும் வழுக்கை விழுந்த இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த குமட்டி காய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவ்வாறு இந்த குமட்டி காயை பயன்படுத்தி வந்தால், வழுக்கைப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்.