அன்றாட வாழ்வில் ரோஸ் வாட்டரின் அளப்பரிய 7 உபயோகங்கள்!

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர்
Published on

ரோஸ் வாட்டர் ஒரு பன்முகத் தன்மையும் நறுமணமும் நிறைந்த ஒரு பொருள். இது நம் அன்றாட வாழ்வில் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. சருமப் பாதுகாப்பு மற்றும் முடி வளர்ச்சி முதல் சமையலறைப் பொருட்களில் ஒன்றாகவும் இருந்து உணவுகளுக்கு சுவையும் மணமும் கூட்டுவது வரை பல வழிகளில் நமக்கு உதவி புரிகிறது. மென்மையும் மணமும் நிறைந்த ரோஸ் வாட்டர் பல நன்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஃபேஷியல் டோனர்: நம் சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்து அதன் pH அளவை சமநிலைப் படுத்தச் செய்யும்போது ரோஸ் வாட்டரை இயற்கை முறை டோனராக உபயோகிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள சிவந்த நிற திட்டுக்கள் மறையும்; அரிப்பு நீங்கி அமைதியான உணர்வு கிட்டும்.

2. மேக் அப் செட் ஸ்பிரே: முகத்தில் மேக்கப் போட்ட பின் ரோஸ் வாட்டரை ஸ்பிரே பண்ணுவதன் மூலம் மேக்கப் நன்கு செட் ஆகி முகத்தில் பனித்துளி போன்ற பள பளப்பு தோன்றும். அது நாள் முழுவதும் நின்று புத்துணர்ச்சி யும் அழகுத் தோற்றமும் தரும்.

3. முடி ஆரோக்கியம்: குளித்து முடித்த பின் ரோஸ் வாட்டர் கலந்த நீரால் முடியை அலசி விட முடிக்கு நல்ல மணமும் ஊட்டமும் கிடைக்கும். தலையின் சருமப் பரப்பை குளிர்வித்து முடி மினுமினுப்பு பெறவும் உதவும்.

4. நீரேற்றம்: வெளியில் செல்லும்போது ஒரு பாட்டில் ரோஸ் வாட்டரை பையில் வைத்து உடன் எடுத்துச் சென்று அவ்வப்போது சருமத்தில் ஸ்பிரே பண்ணிக்கொண்டால் சருமம் நாள் முழுக்க நீரேற்றத்துடன் புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும்  பெறும். வறட்டுத் தன்மை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
உடலில் பொட்டாசியம் குறைவாக உள்ளது என்பதற்கான 7 அறிகுறிகள்! 
ரோஸ் வாட்டர்

5. ரிலாக்ஸ்சேஷன்: குளிக்கும் நீரில் ரோஸ் வாட்டர் கலந்து குளித்தால் ரிச் ரிலாக்ஸ்சேஷன் கிடைக்கும். அதனால் நம் சருமம் மிருதுவாகும். நல்ல மணமும் பெறும்.

6. ஹோம் மேட் ஃபேஸ் மாஸ்க்:  ரோஸ் வாட்டரை தேன், யோகர்ட் அல்லது களிமண் போன்றவற்றுடன் சேர்த்துக் கலந்து மாஸ்க் ஆக முகத்தில் தடவி வர முகம் நீரேற்றமும் மிருதுத் தன்மையும் பெறும்.

7. சமையல்: நம் சமையலில், கேக், பேஸ்ட்ரி போன்ற டெசர்ட் வகைகளைத் தயாரிக்கும்போது அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்தால் அந்த உணவுக்கு ஒரு தனித்துவமான நறுமணம் கிடைக்கும்.

ரோஸ் வாட்டரின் பயன் அறிந்து அதை தகுந்த இடத்தில் தகுந்த நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தி உடல் நலம் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com