இந்திய மணப்பெண்களின் 4 தனித்துவமிக்க ரவிக்கை வடிவமைப்புகள்!

Rich Blouse...
Rich Blouse...Image credit - khuuba.com.au

வ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமண நாள் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்திய மணப்பெண்களின் திருமணப் புடைவையின் டிசைன், தீம், ஃபேப்ரிக், பேட்டர்ன் போன்றவற்றுடன் பிளவுஸும் தனித்தன்மையுடன் இருக்கும். இந்தப் பதிவில் 4 முக்கியமான ரவிக்கை டிசைன்களைப் பற்றி பார்ப்போம்.

1. மாகம் ரவிக்கை வடிவமைப்புகள் (Maggam Blouse Designs)

மாகம் ரவிக்கை வடிவமைப்புகள் பாரம்பரிய மற்றும் தனித்துவமான வடிவமைப்புக்குப் பெயர் பெற்றவை. அவை பட்டுச்சேலை மற்றும் லெஹெங்காக்களுக்கு நேர்த்தியையும் கவர்ச்சியையும் சேர்க்கின்றன. இவற்றின் செழுமையான எம்பிராய்டரி வேலைகள், சிக்கலான டிசைன்கள், மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் கண்களைக் கவரும் வண்ணம் உள்ளன. ஜர்தோசி, குந்தன், கண்ணாடி மற்றும் மணி வேலைப்பாடு போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி திறமையான கைவினைஞர்களால் வடிவமைக்கப்படுகிறது. மாகம் பிளவுசுகள், மலர் வடிவங்கள் முதல் மயில்கள், போன்ற அற்புதமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் உலோக நூல்கள், மணிகள், கண்ணாடி, அக்ரிலிக், பிளாஸ்டிக், படிகம், முத்து, பவளம், ரத்தினம் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் சீக்வின்கள் மற்றும் கற்களைப் பயன்படுத்தி எம்பிராய்டரி செய்யப்படுகிறது.

2. ரிச் குந்தன் பிளவுஸ்;

குந்தன் வேலைப்பாடு கொண்ட பிளவுஸ் டிசைன்கள் ஒரு செழுமையான மற்றும் பாரம்பரியமான அலங்கார வடிவமாகும். இது இந்திய திருமண மணமகள்களுக்கு பிடித்த வண்ணம் உடைகளுக்கு செழுமையையும் நேர்த்தியையும் சேர்க்கிறது. குந்தன் ரவிக்கையில் கண்ணாடி மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு கலைத்திறனுடன் காட்சியளிக்கும்.

குந்தன் வேலையின் அழகு, ரவிக்கை துணிகளில் விரிவான மற்றும் பிரமிக்க வைக்கும் வடிவங்களை உருவாக்கும் திறனில் உள்ளது. உயரமான நெக்லைன்கள், கீஹோல் முதுகுகள் அல்லது தொப்பி ஸ்லீவ்கள் போன்ற அமைப்புடன் அதன் நேர்த்தியை மேம்படுத்துகிறது. பண்டிகை அல்லது திருமண நிகழ்வுகளுக்கு புடைவைகள் அல்லது லெஹெங்காக்களுடன் அணிவதற்கு ஏற்றதாக இருக்கும்.

3. பின் முகுது எம்பிராய்டரி ரிச் பிளவுஸ் (Back Embroidery Rich Blouse)

பின் முதுகு எம்பிராய்டரி ரிச் பிளவுஸ் என்பது ஒரு பாரம்பரிய நேர்த்தி மற்றும் சமகால பாணியுடன் இணைந்து வரும் ஒரு டிசைன். இது வசீகரமான, அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடுடன் ஆடம்பரமான தோற்றத்தை உருவாக்குகிறது. இது சிறப்பு சந்தர்ப்பங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள் அல்லது திருமண நிகழ்வுகளுக்கு சரியான தேர்வாக அமைகிறது.

எம்பிராய்டரி நுட்பங்களில் ஜரிகை வேலை, மணி வேலைப்பாடு, நூல் வேலைப்பாடு, கண்ணாடிகள் பதித்த மலர்கள், கொடிகள் அல்லது மயில்கள் போன்ற பாரம்பரிய உருவங்களை டிசைன் செய்கிறார்கள். பட்டு, வெல்வெட், ப்ரோக்கேட் அல்லது சாடின் போன்ற உயர்தர துணி ரகங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

நெக்லைன் ஆழமான U அல்லது V வடிவங்களில் இருந்து கீஹோல் வடிவமைப்புகளுடன் கூடிய உயர் கழுத்து வரை டிசைன் செய்யப்படும். ஸ்லீவ்ஸ் பல்வேறு நீளங்களில் இருக்கும். ஸ்லீவ்லெஸ், ஷார்ட் ஸ்லீவ்ஸ், முழங்கை வரை நீளம் அல்லது முழுக்கை என பலவிதங்களில் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வெற்றிக்கு உதவும் 8 சிறந்த நண்பர்கள் யார் தெரியுமா?
Rich Blouse...

4. டபுள் நெக்லைன் பிளவுஸ்;

நேர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்டைல்களில் ஒன்று மற்றும் விசேஷ நிகழ்வுகளுக்கு கூடுதல் அம்சம் இரட்டைக் கழுத்துள்ள ரவிக்கை. இது இரண்டு அடுக்கு நெக்லைன்களைக் கொண்டுள்ளது. இதன் உயரமான உட்புற நெக்லைன், அகலமான, தாழ்வான அல்லது அதிக அலங்காரமாக இருக்கும் வெளிப்புற நெக்லைனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரட்டை அடுக்குகள் ஒரு அற்புதமான தோற்றத்தை உருவாக்கும். பெரும்பாலும் மாறுபட்ட துணிகள், வண்ணங்கள் அல்லது அலங்காரங்களை இணைத்து ரவிக்கையின் ஒட்டுமொத்த அழகியலை மேம்படுத்தும். இந்த வடிவமைப்பு பாரம்பரிய மற்றும் சமகால ஆடைகளுக்கும் பொருந்தும். இது நாகரீகமான மற்றும் நேர்த்தியான ஆடைகளுக்கான பிரபலமான தேர்வாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com