சருமத்தை பாதுகாக்கும் முல்தானி மிட்டியின் 5 அசர வைக்கும் நன்மைகள்! 

5 Amazing Benefits of Multani Mitti for Skin Protection!
5 Amazing Benefits of Multani Mitti for Skin Protection!
Published on

இயற்கையான தோல் பராமரிப்பு முறை என்று வரும்போது, பல நூறு ஆண்டுகளாக பலரது விருப்பமான ஒன்றாக இருப்பது முல்தானி மிட்டி. களிமண் படிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் முல்தானி மிட்டி சருமத்திற்கு பல விதமான நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் முல்தானி மிட்டியின் 5 குறிப்பிடத்தக்க சரும நன்மைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். 

1. ஆழமான சுத்திகரிப்பு: முல்தானி மிட்டி அதன் சிறந்த சுத்திகரிப்புப் பண்புகளுக்குப் பெயர் பெற்றது. அதன் உறிஞ்சும் தன்மை சருமத்தில் உள்ள அசுத்தங்கள், அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை வெளியேற்றி புத்துணர்ச்சியூட்டுகிறது. முல்தானி மிட்டியை ஃபேஸ் மாஸ்க் அல்லது க்ளென்சராக வழக்கமாகப் பயன்படுத்தும் போது, முகத்தில் உள்ள துளைகள் அடைப்பட்டு, கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் உருவாவதைத் தடுக்கிறது. 

2. எண்ணெயைக் கட்டுப்படுத்தி முகப்பருக்களை நீக்கும்: எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்பு உள்ளவர்களுக்கு முல்தானி மிட்டி ஒரு சிறந்த மருந்தாகும். அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும் அதன் இயற்கையான திறன், சருமத்தில் எண்ணெய் உற்பத்தி சமநிலைக்கு உதவி, முகம் பிரகாசமாக மாற வழிவகுக்கிறது. சருமத்தின் எண்ணையை கட்டுக்குள் வைப்பதன் மூலம், முகத்தில் வெடிப்புகள் மற்றும் முகப்பருக்கள் ஏற்படுவதை முல்தானி மிட்டி குறைக்கிறது. 

3. சருமத்திற்கு பொலிவு தரும்: முல்தானி மிட்டிக்கு இயற்கையான ப்ளீச்சிங் மற்றும் பளபளப்பு பண்புகள் உள்ளன. இது ஒளிரும் பிரகாசமான முகத்தைப் பெற உதவுகிறது. தொடர்ச்சியாக முல்தானி மிட்டி ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவதால், கரும்புள்ளிகள் தழும்புகள் மற்றும் நிறமிகளை மறையச் செய்து, சருமத்திற்கு கூடுதல் நிறத்தை வழங்குகிறது. 

இதையும் படியுங்கள்:
AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? 
5 Amazing Benefits of Multani Mitti for Skin Protection!

4. இயற்கையான சருமக் குளிர்ச்சி: வெப்பம் அதிகமாக இருக்கும் கோடைகாலங்களில், முல்தானி மிட்டியின் பயன்பாடு சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் இதமான விளைவை ஏற்படுத்துகிறது. இதை அவ்வப்போது சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், சரும வெப்பநிலையை குறைத்து, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தால் தூண்டப்படும் தோல் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இதன் சிறந்த பண்புகள் அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க உதவுகின்றன. இதனால் சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். 

5. நச்சுக்களை நீக்கும்: முல்தானி மிட்டி ஒரு இயற்கை நச்சு நீக்கி. சருமத்திலிருந்து நச்சுக்கள் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு சரும செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது மேம்படுத்தப்படுகிறது. எனவே முல்தானி மிட்டியை வாரம் ஒரு முறையாவது பயன்படுத்தினால், இளமை மற்றும் துடிப்பான தோற்றத்தை நாம் எப்போதும் பராமரிக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com