ஆண்களுக்கான 5 சினோஸ் பேண்ட்!

ஆண்களுக்கான 5 சினோஸ் பேண்ட்!

பொதுவாக அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரிகளுக்குச்   செல்பவர்கள், எல்லாம் காட்டன் பேண்ட், ஜீன்ஸ் பேண்ட்களை அணிவார்கள். வழக்கமாக அணியும் பேண்ட்டுகளைத் தவிர்த்து சினோஸ் போன்ற புதுவகையான பேண்டைப் பயன்படுத்தினால் கொஞ்சம் தனித்துவமாகத் தெரிவீர்கள்.

இந்த ஐந்து நிற சினோஸ்களை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள், அது, உங்களை சூப்பர் ஸ்டைலானவராகவும், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கவர்ச்சிகரமான மனிதனாகவும் மாற்றும்.

1. நீல நிறச் சினோஸ்: நீலம் அமைதியின் நிறம். இந்த நீல நிற சினோஸ் உடன், வெள்ளை நிற ஷர்ட் அணிந்தால் மிகவும் அட்டகாசமாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி அலுவலகம், முக்கிய நிகழ்வுகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நீலநிற சினோஸ் பேண்டை  பயன்படுத்தலாம்.

2. பச்சை சினோஸ்: பச்சை எடுப்பான நிறம் அல்ல என்று, பெரும்பாலானவர்கள் அந்த நிறத்தில் சட்டைகூட அணிவதில்லை. ஆலிவ் பச்சை சினோஸ், இத்துடன் வெள்ளை நிற ஷர்ட் அணிந்து பாருங்கள். மற்றவர்கள் அணியத் தயங்கும் நிறங்களைச் சரியான கலவையுடன் நீங்கள் அணிந்துப் பாருங்கள். வித்தியாசமாகத் தெரிந்து தூள் கிளப்புவீர்கள்!

3. காக்கி நிற சினோஸ்: காக்கி சினோஸ்உடன், ஊதா, கருப்பு நிறம் போன்ற அடர் நிற சட்டைகள் உடுத்தினால், பந்தாவாகத் தெரிவீர்கள்! இத்துடன் டீ சர்ட் மற்றும் பிரிண்டட் ஷர்ட்டும் அணிந்தால் நன்றாக இருக்கும்.

4. வெள்ளை சினோஸ்: வெள்ளை தனித்து நிற்கிறது. தன்னம்பிக்கை உள்ள மனிதனால் மட்டுமே அதை உணர முடியும். உங்கள் உடல் நிறத்திற்கு ஏற்ப, டார்க்கான சட்டைகளை இணைத்து உடுத்தினால் வெள்ளை சினோஸ்களால்,உங்கள் கவர்ச்சி கூடும்.

5.சாம்பல் நிற சினோஸ்: கருப்பு நிறத்திற்குப் பிறகு ஆண்கள் அதிகம் பயன்படுத்தும் நிறம் சாம்பல்! பச்சை, வெள்ளை போன்ற சட்டைகளை இதனுடன் இணைத்து உடுத்தினால் அருமையான தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும்.

ஜீன்ஸ் பேண்ட்களைக் காட்டிலும் சினோஸ் பேண்ட்களே  இன்றைய டிரெண்ட்! இது காட்டனால் ஆனா ஆடை என்றாலும், ஸ்டைல் ஆகவும் பார்ப்பவரைக் கவரும் விதமாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com