நைட்டிக்கு 'குட்பை' சொல்லும் காலம் வந்துடுச்சு: வீட்டின் சௌகரியத்தை கெடுக்காத 5 மாடர்ன் ஆடைகள்!

திடீர் கடைகளுக்கும் விருந்தினர்களுக்கும் ஆடை மாற்றாமல் சமாளிக்க உதவும் ஸ்மார்ட் ஹோம்வேர் உடைகள்.
நைட்டி
நைட்டிGemini image
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

பெண்களுக்கு மிகப் பிடித்த உடைகளுள் ஒன்று நைட்டி. பல பெண்கள் நாள் முழுவதும் இதையே தங்களுடைய முதன்மை ஆடையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அணிவதற்குச் சௌகரியமாகவும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கு வசதியாகவும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும், திடீரென விருந்தினர்கள் வந்துவிட்டாலோ அல்லது அருகில் இருக்கும் கடைகளுக்குச் செல்ல நேரிட்டாலோ உடனடியாக உடையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நைட்டியை விடப் பார்ப்பதற்கு அழகாகவும், அதே சமயத்தில் அணிவதற்குச் சௌகரியமாகவும் இருக்கும் சில நவீன உடை வகைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

1. கோ-ஆர்ட் செட் (Co-ord Set)

இந்த ஆடை ஒரே வண்ணத்தில் அல்லது ஒரே மாதிரியான டிசைனில் மேல் சட்டையும், பேன்ட்டும் இணைந்த ஒரு செட் ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமாகத் தோற்றமளிக்கும். திடீரென அருகில் உள்ள கடைகளுக்குச் செல்ல நேரிட்டால் உடையை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

வீட்டில் அன்றாட வேலைகளைச் செய்யும்போதும், சமையலறையில் இயங்கும்போதும் நைட்டியைப் போன்று கால்களில் சுற்றிக்கொள்ளாமல் சுதந்திரமாக இயங்க முடியும். உடலுக்கு மிக நேர்த்தியான மற்றும் நவீனத் தோற்றத்தைத் தரும்.

2. காஃப்தான் (Kaftan)

இது அகலமான, தாராளமான கை அமைப்பைக் கொண்ட ஒரு தளர்வான ஆடையாகும். இது நீண்ட கவுன் வடிவிலோ அல்லது பைஜாமாவுடன் அணியும் குட்டைச் சட்டை வடிவிலோ கிடைக்கும். காட்டன், ரேயான் போன்ற மெல்லிய பருத்தித் துணிகளில் தைக்கப்படும் இந்த ஆடைகள், கோடைகாலத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த தேர்வாகும். உடலை இறுக்காமல் அணிந்துகொள்ளச் சௌகரியமாக இருக்கும். இதில் உள்ள இடுப்புக் கயிற்றை தேவையான அளவுக்குத் தளர்த்தவோ அல்லது இறுக்கிக் கட்டிக்கொள்ளவோ முடியும்.

நைட்டி
நைட்டிGemini image

3. காட்டன் பைஜாமா மற்றும் டி-ஷர்ட்:

மென்மையான பருத்தியாலான டி-ஷர்ட் மற்றும் தளர்வான காட்டன் பைஜாமாக்கள் உலக அளவில் பெண்களால் விரும்பி அணியப்படும் ஒரு ஆடையாகும். இரவில் தூங்கச் செல்லும்போது உடலுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் தராமல் சௌகரியமாக இருக்கும்.

பகல் நேரத்திலும் இதை அணிந்துகொண்டு வேலை செய்ய வசதியாக இருக்கும். பெரும்பாலான பைஜாமாக்களில் பாக்கெட்டுகள் இருப்பதால், மொபைல் போன், சாவி போன்றவற்றை எளிதாக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மீண்டும் டிரெண்டாகும் 6 பாரம்பரிய கைத்தறி ஆடைகள்: நவீன ஃபேஷன் உலகில் புதிய புரட்சி!
நைட்டி

4. குர்தி Nursing பிளாஸோ (Kurti with Palazzo)

நீளமான காட்டன் குர்தியுடன், தளர்வான பிளாஸோ பேன்ட் அணிவது நைட்டிக்கு மிகச் சிறந்த மற்றும் கம்பீரமான மாற்றாகும். வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும் சூழலில் நைட்டி அணிந்திருப்பதை விட, இந்த வகை ஆடை அணிந்திருப்பது நாகரிகமான தோற்றத்தைத் தரும்.

வீட்டு வேலை செய்ய வசதியாகவும் இருக்கும். ஒர்க் ஃபிரம் ஹோம்' செய்பவர்கள் ஆன்லைன் வீடியோ அழைப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும்போது இது ஒரு முறையான ஃபார்மல் தோற்றத்தையும் அளிக்கும்.

5. மேக்சி டிரஸ்கள் (Maxi Dresses)

மேக்சி டிரஸ் என்பது கழுத்திலிருந்து கணுக்கால் வரை நீண்டிருக்கும் நீளமான ஆடையாகும். நைட்டியைப் போன்ற நீளம் கொண்டது என்றாலும், இதன் தையல் மற்றும் வடிவம் முற்றிலும் வித்தியாசமானது. நைட்டியைப் போன்ற தாராளமான, தளர்வான அமைப்பைக் கொண்ட ஆடைகளை விரும்பும் பெண்களுக்கு மேக்சி டிரஸ்கள் சிறந்த மாற்றாகும். இது நைட்டியைப் போலச் சோம்பேறித்தனமான தோற்றத்தைத் தராமல், சுறுசுறுப்பான மற்றும் அழகான தோற்றத்தை வழங்கும்.

இதையும் படியுங்கள்:
எந்த விசேஷத்திற்கும் 5 நிமிடங்களில் பளிச்சினு மாறலாம்! எளிய அழகு குறிப்புகள்!
நைட்டி

பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் வெறும் சௌகரியத்தை மட்டும் தருவதாக இருக்கக் கூடாது; அது அவர்களின் மனநிலையையும், சுறுசுறுப்பையும் தீர்மானிக்கிறது. நைட்டி மட்டுமே ஒரே தீர்வு அல்ல. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆடைகளை அணிவதன் மூலம் பெண்கள் தங்களை அழகாகவும் காட்டுவதோடு, மிகுந்த சௌகரியத்தையும் உணர முடியும்.

நைட்டியை விட அழகாகவும், அதே சமயம் வீட்டு வேலைகளுக்கு அசௌகரியம் இல்லாத 5 சிறந்த ஆடை வகைகளைத் தேர்வு செய்ய முடியும்.

logo
Kalki Online
kalkionline.com