இந்த 5 DIY Toner & Scrub ட்ரை பண்ணிருக்கீங்களா? Glowing Skin கிட்டும்!

ஆண்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சோம்பு நீர், பேக், ஸ்க்ரப் மூலம் சருமத்தை டீப் கிளீன்சிங் செய்து, பஃபி ஐஸ், ஓபன் போர்ஸ், டெட் செல்ஸ் போன்ற பிரச்சனைகளை வீட்டிலேயே எளிதில் சமாளிக்கலாம்
Anti aging toner at home
Anti aging toner at homeAI Image
Updated on

ம்ம வீட்டுச் சமையலறையில் இருக்கும் சோம்பில் (பெருஞ்சீரகம்) அசாத்தியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் நிறைந்துள்ளன. சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க சோம்பு எப்படி உதவுகிறது என்பதற்கான 5 அருமையான அழகு குறிப்புகள் இதோ:

முகத்தை இறுக்கமாக்க 'சோம்பு டோனர்' (Anti-Aging Toner):

வயதானால் ஏற்படும் முகச்சுருக்கங்களைத் தடுத்து, சருமத்தை இறுக்கமாக்க (Skin Tightening) சோம்பு டோனர் மிகச்சிறந்தது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பைப் போட்டு நன்றாகக் கொதிக்கவையுங்கள். தண்ணீர் பாதியாக வற்றியதும், அதை வடிகட்டி ஆறவைக்கவும். இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு, தினமும் முகத்தைக் கழுவிய பின் டோனராகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள பெரிய துளைகளைச் (Open Pores) சுருக்கும்.

முகப்பருக்களை விரட்டும் 'சோம்பு பேக்' (Acne Cleanser):

சோம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சோம்பை லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் சோம்புப் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். வாரத்திற்கு இருமுறை இப்படிச் செய்தால் பருக்கள் குறையும்.

இதையும் படியுங்கள்:
பைக் ஓட்டுவதால் முகம் கருத்துப்போயிருக்கா? இனி கவலையே வேண்டாம்... இதோ 5 நிமிட தீர்வு!
Anti aging toner at home

கண்களின் சோர்வு மற்றும் வீக்கம் நீங்க (Puffy Eyes Remedy);

கம்ப்யூட்டர்/மொபைல் பார்ப்பதால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண்கள் உப்பலாக (Puffy eyes) இருப்பதற்கு இது நல்ல தீர்வு.சோம்பைக் கொதிக்கவைத்த நீரை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆக்கிக் கொள்ளுங்கள். இரண்டு பஞ்சு உருண்டைகளை (Cotton pads) அந்த ஜில்லென்ற சோம்பு நீரில் நனைத்து, கண்களின் மேல் 10-15 நிமிடங்கள் வைத்திருந்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறும்; கருவளையமும் மெல்ல மறையும்.

சருமப் பொலிவிற்கான 'சோம்பு ஆவி' (Fennel Steam):

முகத்தில் உள்ள அழுக்குகளை ஆழமாக நீக்கி (Deep Cleansing), ரத்த ஓட்டத்தை அதிகரிக்க சோம்பு ஆவி பிடிக்கலாம்.ஆவி பிடிக்கும் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் சில ரோஜா இதழ்களைப் போட்டுக்கொள்ளவும். இந்த நீரில் 5 நிமிடங்களுக்கு முகத்திற்கு ஆவி பிடித்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் (Blackheads) மென்மையாகி எளிதில் நீங்கிவிடும். முகம் உடனடியாகப் பிரகாசமாகும்.

மிருதுவான சருமத்திற்கு 'சோம்பு ஸ்க்ரப்' (Glow Scrub):

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க:கரகரப்பாக அரைத்த சோம்புப் பொடியுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் வட்ட வடிவில் (Circular motion) மென்மையாக மசாஜ் செய்யவும். 5 நிமிட மசாஜிற்குப் பின் முகத்தைக் கழுவினால், சருமம் பட்டுப்போல மிருதுவாகும்.

முக்கியக் குறிப்பு: சோம்பு நீர் சருமத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், முதல்முறை முகத்தில் பயன்படுத்தும் முன் காதின் பின்புற பகுதியிலோ அல்லது கையின் உட்பகுதியிலோ 'பேட்ச் டெஸ்ட்' (Patch Test) செய்து ஒவ்வாமை (Allergy) இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

logo
Kalki Online
kalkionline.com