பைக் ஓட்டுவதால் முகம் கருத்துப்போயிருக்கா? இனி கவலையே வேண்டாம்... இதோ 5 நிமிட தீர்வு!

green-tea-and-tomato
green-tea-and-tomato
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

பைக் ஓட்டும்போது வெயில் மற்றும் காற்று பாதிப்பால் சருமம் கருத்துப்போவது இயல்பானதுதான். சருமக் கருமையைப் போக்க வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக்கொண்டு இயற்கையான முறையில் தீர்வு காணலாம். சில எளிய மற்றும் பயனுள்ள இயற்கை டீ டேன் பொருட்கள் சிலவற்றை இப் பதிவில் காணலாம்.

பயன்படுத்திய டீ பேக்குகள் (used tea bags):

பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும் பொழுது உபயோகிக்கலாம். குளிர்ந்த டீ பேக்குகளை வெயில் பட்டு கருமையான சருமப் பகுதிகளில்(முகம், கழுத்து போன்ற) 20 நிமிடங்கள் வைத்து எடுப்பதன் மூலம், அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் டேன்-ஐ நீக்க உதவும்.

தக்காளி மற்றும் தேன்:

ஒரு தக்காளியை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து, அத்துடன் சிறிதளவு தேன் கலந்து முகம் கழுத்து மற்றும் முன்கை போன்ற சருமப் பகுதிகளில் தடவி விடவும். தக்காளியில் உள்ள லைகோபீன் (Lycopene) ஒரு இயற்கையான சன் ஸகிரீன் போல செயல்பட்டு கருமையை விரைவில் நீக்கும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ இது சிறந்த இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்பட்டு சருமத்தை பொலிவுறச் செய்யும்.

பப்பாளி மற்றும் தேன்:

நன்கு பழுத்த பப்பாளியை விழுதாக அரைத்து இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, அத்துடன் தேன் கலந்து மசாஜ் செய்யவும். இதிலுள்ள பாப்பைன் (Papain) என்சைம்கள் சரும நிறத்தை மீட்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இளநரையும் முடி உதிர்வும் - முற்றுப்புள்ளி வைப்பது எப்படி?
green-tea-and-tomato

கடலை மாவு தயிர்:

1 ஸ்பூன் கடலை மாவுடன் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்துப் பகுதி மற்றும் கைகளில் தடவி விடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர டேன் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

கற்றாழை ஜெல்:

வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் கருமைக்கு தூய கற்றாழை ஜெல்லைத் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவிவர வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் கருமை நிறம் மாறி இயல்பான சரும நிறத்தைப் பெறலாம்.

வெள்ளரிக்காய் + எலுமிச்சை:

எலுமிச்சை சாற்றை சிறிதளவு தண்ணீர் கலந்து அத்துடன் வெள்ளரிக்காய் சாறும் சேர்த்து முகம், கழுத்து, கைகள் என வெயில் படும் இடங்களில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வர சருமத்தின் கருமை நிறம் மாறுவதுடன் சருமத்திற்கு குளிர்ச்சியையும் தரும்.

பச்சை தேநீர் (green tea) டானர்:

கிரீன் டீயை கொதிக்க வைத்து நன்கு ஆறவிடவும். அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து, கைகள் என வெயில் படும் இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.

மற்றொரு முறை, ஒரு டேபிள் ஸ்பூன் கிரீன் டீ பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பதுடன், சருமத்தின் கருமையையும் நீக்கும்.

இதையும் படியுங்கள்:
மல்லிகைப் பூ இனி வாசனைக்கு மட்டுமல்ல; உங்கள் அழகைக் கூட்டவும்தான்!
green-tea-and-tomato

பிளாக் டீ ஸ்ப்ரே:

கருப்பு தேநீரை (black tea) நன்கு கொதிக்கவிடவும். சிறிது ஆறியதும் ஒரு ஸ்பிரே பாட்டில் விட்டு வைத்துக்கொண்டு, முகம் மற்றும் கைகளில் தெளித்து வர வெயிலால் ஏற்படும் டேன் நீங்கும். பிளாக் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தில் ஏற்படும் நிறமாற்றம், வீக்கம், அரிப்பு, சரும அழற்சி போன்றவற்றைக் குறைத்து சருமத்தை சகஜ நிலைக்கு கொண்டு வரும்.

முக்கியமாக பைக் ஓட்டுவதற்கு முன்பு சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவது அவசியம். அத்துடன் பைக் ஓட்டும்போது முழுக்கை சட்டைகள், முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மெட் மற்றும் கை உறைகளை (gloves) பயன்படுத்த சருமத்தின் நிறம் மாறாமல் இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com