
தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே அழகான பொலிவான சருமம்/ தோற்றம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக அதிக விலைக் கொண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இது தற்காலிகமாகவே நிறத்தை பொலிவாக மாற்றுமே தவிர அதனால் பயனில்லை.
நம்முடைய சருமத்தில் உள்ள Melanin என்னும் நிறமி தான் நம்முடைய நிறத்தை தீர்மானிக்கிறது. இதில் Eumelanin, pheomelanin என இருவகை உண்டு. இதில் Eumelanin கருமை நிறத்தையும், Pheomelanin வெளிர் நிறத்தையும் கொடுக்கும்.
இந்த பதிவில் இயற்கையாகவே சருமத்தை பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடிய 5 உணவு வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
1. கேரட்.
கேரட் கண்களுக்கு மட்டுமில்லை நம் சருமத்திற்கும் மிகவும் நல்லது. நிறைய சரும கிரீம்களில் Retinol என்று இருப்பதை பார்த்திருக்கலாம். வைட்டமின் ஏ வினுடைய மற்றொரு பெயர் தான் ரெட்டினால். இதை நம் உடலில் இயற்கையாக உருவாக்கக்கூடிய Beta carotene சத்து கேரட்டில் இருக்கிறது. 100 கிராம் கேரட்டில் 8.3 கிராம் பீட்டா கரோட்டின் உள்ளது.
2. ஆரஞ்ச்.
ஆரஞ்ச் பழத்தில் வைட்டமின் சத்து அதிகமாக உள்ளது. அதிக சூரிய ஒளியால் உண்டாகும் நிறயிழப்பை தடுக்கும் ஆற்றல் வைட்டமின் சி க்கு உண்டு. இதனால் தான் பெரும்பாலான சன் ஸ்கிரீன், பாடி லோஷனில் வைட்டமின் சி சத்து சேர்க்கப்பட்டுள்ளது.
3. தக்காளி.
தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு அதில் இருக்கக்கூடிய Lycopene தான் காரணம். இதற்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உண்டு. 100 கிராம் தக்காளியில் 5.6 மில்லி கிராம் லைக்கோபினே இருக்கிறது. இது முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.
4. சிவப்பு திராட்சை.
சிவப்பு திராட்சையில் Resveratrol என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது மெலனின் செல்களுக்கு உதவக்கூடிய Melanocytes செல்களில் வெளிர் நிறத்தை கொடுக்கக்கூடிய மெலனினை அதிகரிக்கும். இதன் மூலமாக நல்ல ஒரு ஸ்கின் டோனைக் கொடுக்கக்கூடியது சிவப்பு திராட்சை.
5. வெள்ளரிக்காய்.
சருமத்தில் நிறம் மாற்றத்திற்கான முக்கிய காரணம் சரும வறட்சி தான். இதனை தடுக்கக்கூடிய ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உடலில் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதோடு, உடல் உஷ்ணத்தையும் குறைக்கும். இதன் மூலமாக சரும வறட்சியை தடுத்து மிருதுவான சருமத்தை கொடுக்கக்கூடியது வெள்ளரிக்காய்.
இந்த 5 உணவுகளை எடுத்துக் கொள்வதால் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்கும்.