
வாழைப்பூ எளிதாக கிடைக்கக் கூடியது என்றாலும் அதை சுத்தம் செய்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு நாம் அதை வாங்கி சாப்பிடுவதை பெரிதும் தவிர்த்து விடுகிறோம். ஆனால், வாழைப்பூவில் மற்ற காய்கறிகளை விடவும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டாலே நமக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.அனீமியாவை குணமாக்கும்.
அனீமியா என்று சொல்லப்படும் ரத்தச்சோகை உடலில் ஏற்படுவதற்கு காரணம் ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவாக இருப்பதேயாகும். இந்த இரும்புச்சத்து வாழைப்பூவில் அதிகளவில் இருக்கிறது. 100 கிராம் வாழைப்பூவில் 2.2 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான இரும்புச்சத்தில் 17 சதவீதமாகும். இது உடலில் இரும்புச்சத்தை அதிகரித்து அனீமியாவை குணமாக்கும்.
2. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இருக்க குறைந்த கிளைசெமிக் கொண்ட உணவுகளும், அதிக நார்ச்சத்துக் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 100 கிராம் வாழைப்பூவில் 5.7 கிராம் நார்ச்சத்து உள்ளது. நாம் சாப்பிட்ட உணவின் மூலமாக வரும் ரத்த சர்க்கரையை வேகமாக ஏறுவதை தடுக்கும். எனவே, இது சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும்.
3. மாதவிடாய் வலியை குணமாக்கும்.
பெண்கள் பலரும் மாதவிடாய் வலியால் பெரிதும் அவதிப்படுவதுண்டு. அப்படியிருப்பவர்களுக்கு வாழைப்பூ மிகவும் நல்லது. இதிலிருக்கக்கூடிய பொட்டாசியம், மெக்னீசியம் Uterus Muscles இருக்கமடைவதை தடுத்து மாதவிடாய் வலியை குறைக்கும். மேலும் இதிலிருக்கும் வைட்டமின் B6 Serotonin ஹார்மோனை ஒழுங்குப்படுத்துவதோடு மாதவிடாய் வலியையும் குறைக்கும்.
4. மலச்சிக்கலை குணமாக்கும்.
மலச்சிக்கல் உண்டாவதற்கு சாப்பிடும் உணவில் போதிய நார்ச்சத்து இல்லாதது ஒரு முக்கிய காரணமாகும். Natural laxative properties அதிகம் இருக்கும் உணவுகளில் வாழைப்பூ மிக முக்கியமானது. வாழைப்பூவில் மலச்சிக்கலை தடுக்கக்கூடிய நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் வாழைப்பூவில் 5.7 கிராம் நார்ச்சத்தும், 90 சதவீதத்திற்கு அதிகமான நீர்ச்சத்தும் இருக்கிறது.
5. எலும்புகளை வலுவாக்கும்.
வாழைப்பூவில் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் என்று சொல்லப்படும் கேல்சியம், மெக்னீசியம், வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இது புதிய எலும்பு திசுக்களை உற்பத்தி செய்வதோடு Osteoporosis போன்ற எலும்பு பிரச்னைகள் வராமல் தடுக்கும். மேலும் வாழைப்பூவில் Quercetin, catechin போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது மூட்டில் உண்டாகக்கூடிய Inflammationஐ குறைப்பதோடு மூட்டு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
எனவே, வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்வது நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.