

குளிர் காலம் வந்துவிட்டாலே சருமத்திற்கு அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் சருமம் வறண்டு போவது மட்டுமல்லாமல், முகத்தில் தெரியும் திறந்த துளைகள் (Open Pores) உங்கள் அழகைக் குறைத்து, முகத்தை சோர்வாகக் காட்டலாம். தூசு, அழுக்கு மற்றும் அதிக எண்ணெய் சுரப்பு போன்றவை இந்தத் துளைகள் பெரிதாகக் காரணங்கள்.
ஆனால் கவலை வேண்டாம்! நமது சமையலறையில் இருக்கும் சில எளிய பொருட்களைப் பயன்படுத்தி, இந்த குளிர்காலத்தில் திறந்த துளைகளைக் குறைத்து, பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
1. ஐஸ் கட்டிகள் (Ice Cubes):
குளிர் காலத்தில் சுடுநீரில் குளிப்பது இதமாக இருந்தாலும், இது சரும துளைகளைத் திறக்கலாம். அதற்குப் பதிலாக, முகத்தில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது ஒரு 'மேஜிக்' போல வேலை செய்யும்.
ஒரு சுத்தமான துணியில் ஒரு ஐஸ் கட்டியை வைத்து, துளைகள் அதிகமாக உள்ள இடத்தில் 15-30 வினாடிகள் ஒத்தடம் கொடுக்கவும்.
ஐஸ் கட்டிகளில் உள்ள குளிர்ச்சி, இரத்த நாளங்களைச் சுருக்கி, திறந்த துளைகளை உடனடியாக இறுக்க (Tighten) உதவுகிறது. இது குளிர்காலத்தில் சருமத்தை புதுப்பிக்கவும் செய்யும்.
2. கற்றாழை ஜெல் (Aloe Vera Gel):
கற்றாழை ஒரு இயற்கையான வரப்பிரசாதம். இது குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியையும் நீக்கி, துளைகளையும் சுத்தப்படுத்துகிறது.
ஃப்ரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை எடுத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின் சாதாரண நீரில் கழுவவும். இதை தினமும் செய்யலாம். கற்றாழை ஜெல் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது. இதனால் துளைகள் சுத்தமாகி, அதன் தோற்றம் குறைகிறது. இது சருமத்திற்கு போதுமான நீரேற்றத்தையும் அளிக்கும்.
3. தேன் (Honey):
தேன் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் சருமத்தை இறுக்கும் (Astringent) பண்புகளைக் கொண்டுள்ளது. இது குளிர்கால வறட்சிக்கும் சிறந்த தீர்வு. சிறிது தேனை எடுத்து, குறிப்பாக மூக்கு மற்றும் கன்னங்களில் உள்ள திறந்த துளைகள் மீது வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை அலச துளைகள் இறுகலாம்.
தேன் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, அதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் துளைகளில் அழுக்கு சேர்வதைத் தடுக்கிறது. இதன் மூலம் துளைகள் சுருங்கி, சருமம் மென்மையாகிறது.
4. ரோஸ் வாட்டர் (Rose Water):
குளிர்கால சருமப் பராமரிப்பில் டோனிங் (Toning) மிக முக்கியம். ஆல்கஹால் இல்லாத ரோஸ் வாட்டர் சிறந்த டோனராக செயல்படுகிறது. குளிர்ந்த ரோஸ் வாட்டரை முகத்தில் ஸ்ப்ரே செய்து, துடைக்காமல் காற்றில் உலர விடவும். ரோஸ் வாட்டர் சருமத்தின் pH சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. இது துளைகளை மூடி, சருமத்தை மிருதுவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்கிறது.
5. முல்தானி மட்டி (Multani Mitti):
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மட்டி ஒரு வரப்பிரசாதம். இது துளைகளை சுருக்கி, பளிச்சென்ற சருமத்தை அளிக்கும். 2 தேக்கரண்டி முல்தானி மட்டியுடன் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து கெட்டியான பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். முல்தானி மட்டி துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் (Sebum) மற்றும் அழுக்கை உறிஞ்சும் திறன் கொண்டது. இது துளைகளைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைத்து, அவற்றின் தோற்றத்தை வெகுவாகக் குறைக்கிறது.
இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், குளிர்காலத்தில் உங்கள் சருமத்தைப் பராமரித்து, திறந்த துளைகளைக் குறைத்து, பளபளப்பான, சருமத்தைப் பெறலாம்.