உங்கள் நாளை சிறப்பாக்க உதவும் 10 எளிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் டிப்ஸ்!

beauty tips in tamil
Refreshing tips!
Published on

1. காய்ந்த செம்பருத்தி பூக்களுடன்  கற்பூரத்தை பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை அகலும்.

2. ரஞ்சு சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் உறைய வைத்து ஒரு வெள்ளை துணியில் முடிந்து  கண்கள் மேல் ஒத்தி எடுத்தால் கண்களின் சோர்வு மறைந்து பார்வை பிரகாசமாகும்.

3. பாதத்தில் வெடிப்பு இருந்தால் மருதாணி இலையை விழுதுபோல் அரைத்து தடவி வந்தால் பலன் நிச்சயம உண்டு.

4. வரை இலைகளை அரைத்து அதன் சாற்றை பிழிந்து பூசி வந்தால் உடலில் ஏற்படும் தழும்புகள் படிப்படியாக மறையும்.

5. கைகள் அணிவதாலும் வெயிலினாலும் கழுத்தில் கருவளையம் ஏற்படும். சிறிது கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து கழுத்தை சுற்றிலும் பூசி 20 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருவளையம் மறையும்.

6. ன்றாக காய்ச்சிய தேங்காய் எண்ணெயில் காய்ந்த வேப்பம்பூ பாதி அளவு போட்டு ஆறவைத்த தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை குறையும்.

7. திகம்   கணினியில் வேலை செய்யும்போது கண்கள் மிகவும் சோர்வாகும். சிறிது தூய்மையான பஞ்சை எடுத்து அதை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரில் நனைத்து அதை கண்களின் மீது வைத்தால் கண்கள் உடனடி புத்துணர்ச்சி பெறும்.

இதையும் படியுங்கள்:
கழுத்து நகைகளின் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்!
beauty tips in tamil

8. ருமனான பெண்கள் அகலம் குறைந்த பார்டர் கொண்ட உடைகளை அணிந்தால் பருமன் குறைந்த வர்களாகத் தெரிவார்கள்.

9. விழாக்கள் செல்லும் போது போடும் மேக்கப்களை நீக்கிய பின் தேங்காய் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்வது பொலிவு தரும்.

10. பால் காய்ச்சிய உடனே பாலின் மேலே படியும் நுரையை எடுத்து ஆறியதும் முகத்தில் தடவி க்ளாக் முறையில் மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் மிருதுவாக பொலிவு பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com