கோடைக்கால சரும அரிப்பை போக்கும் 5 வீட்டு வைத்திய முறைகள்!

5 Home Remedies to Treat Itchy Summer Skin
5 Home Remedies to Treat Itchy Summer Skinhttps://www.lymphoma.org.au
Published on

வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு முகம் எங்கும் அரிப்பும் எரிச்சலும் தோன்றக்கூடும் இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.

1. துளசி இலைகள்: ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.

2. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல் அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும் முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்.

3. ஓட்ஸ்: ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும். 15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆட்டுப்பால் சீஸிலிருக்கும் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள்!
5 Home Remedies to Treat Itchy Summer Skin

4. ஆப்பிள் சிடார் வினிகர்: இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.

5. தயிர்: முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரை முகம், கழுத்து, கை, கால்களில் தடவி விடவும். 15 நிமிடம் கழித்து முகம் மற்றும் கை, கால்களை சோப்பு போட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com