
பார்லருக்குப் போகாமலேயே முகத்தை இயற்கையாகவே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கிளென்ஸ் மற்றும் ப்ளீச் செய்து கொள்ளலாம். அதற்கு மிக முக்கியமாக ஐஸ் கியூபுகள் உதவுகின்றன. சாதாரண ஐஸ் கியூபுகள் முகத்தில் இருக்கும் அழுக்குகளையும், தூசுகளையும் நீக்கி பளிச்சென்று ஆக்கும்.
அத்துடன் இயற்கையான கற்றாழை, வெள்ளரிக்காய், ரோஸ் வாட்டர், எலுமிச்சைச் சாறு, தேன், காபி பவுடர், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களையும் சேர்த்து விதவிதமான ஐஸ்கியூப்புகளை தயாரித்து அவற்றை உபயோகப்படுத்தினால் முகம் பளபளப்பாக அழகாக மாறிவிடும்.
1. காபி பவுடர் + தேங்காய் எண்ணெய் ஐஸ் கியூப்;
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் விதம்;
ஒரு கிண்ணத்தில் நீரூற்றி அதில் இரண்டு ஸ்பூன் காபி பவுடரையும் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயும் கலந்து ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். அது ஐஸ் கட்டியாக மாறியதும், அதை எடுத்து ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
பயன்கள்; காபி பவுடர் முகத்தில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முகத்தை இயற்கையாக பளபளப்புடன் வைக்கிறது.
2. எலுமிச்சைசாறு பிளஸ் தேன் கலந்த ஐஸ் கியூப்;
தயாரிக்கும் விதம்;
இரண்டு ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் அரை ஸ்பூன் தேனை கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் நீரூற்றி அதனுடன் சமமாக கலந்து விட வேண்டும். ஐஸ்கியூப்பாக மாறியதும் அதை எடுத்து ஒரு மெல்லிய துணியில் சுற்றி முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யவேண்டும்.
பயன்கள்; எலுமிச்சை சாரில் உள்ள விட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் முகத்திற்கு நல்ல நிறத்தைத் தருகிறது. தேன் போஷாக்கைத் தருகிறது.
3. ரோஸ் வாட்டர்;
தயாரிக்கும் விதம்; இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சாதாரண தண்ணீரில் கலந்து ஐஸ்கியூப்பாக மாற்றிக்கொள்ளவும்.
பயன்கள்; இதை முகத்தில் மசாஜ் செய்யப் பயன்படுத்தும் போது இதில் உள்ள சேர்மங்கள் காரணமாக முகம் பிங்க் நிறத்தில் பளபளப்பாகும்.
4. கற்றாழைச்சாறு பிளஸ் வெள்ளரிச் சாறு கலந்த ஐஸ் கியூப்;
தயாரிக்கும் விதம்; கற்றாழையை சுத்தப்படுத்தி சின்ன துண்டுகளாக்கி, மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதேபோல சிறிய சைசில் உள்ள ஒரு முழு வெள்ளரிக்காயை தோல் சீவி ஜூஸாக ஆக்கிக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் அலோவேரா ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் கலந்து லேசாக நீரூற்றி ஐஸ்கியூப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
பயன்கள்; இதை முகத்தில் வைத்து பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை நீக்குகிறது. முகத்தை மாசு மருவின்றி வைக்கிறது. மற்றும் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.
5. ஆரஞ்சுச் சாறு மற்றும் புதினா கலந்த ஐஸ் கியூப்;
தயாரிக்கும் விதம்; ஒரு முழு ஆரஞ்சை உரித்து, ஜூஸ் ஆக்கிக்கொள்ள வேண்டும். புதினா இலைகளை அவை ஃபிரஷ்ஷாக இருந்தால் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். சற்றே வாடியிருந்தால் அது ஜூசாக மாற்றிக் கொள்ளலாம்.
இரண்டு ஸ்பூன் ஆரஞ்சுசாறு மற்றும் இரண்டு ஸ்பூன் புதினா இலைகள் அல்ல்து சாறு இரண்டையும் கலந்து கிண்ணத்தில் வைத்து ஐஸ்கியூப்பாக மாற்றிக்கொள்ளவும்.
இதனுடைய பயன்பாடுகள்; புதினா இலைகள் முகத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் விட்டமின் சி முகத்திற்கு பளபளப்பையும் நல்ல நிறத்தையும் தருகிறது.