
வீட்டுச் சமயலறையில் உள்ள இந்த இரு பொருட்களே உங்கள் சரும ஆரோக்கியத்திற்குப் போதும். ப்ளாக் ஹெட்ஸ், அரிப்பு இவற்றை நீக்கி உங்கள் சருமம் பொலிவை மேம்படுத்துவதற்கு தயிர் மற்றும் ஓட்ஸ் இந்த இரண்டுமே போதுமானது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் உடலை நீரேற்றத்துடன் வைக்கும். ஓட்ஸ் பழைய செல்களை நீக்கிப் புது பொலிவைத்தரும்.
ஓட்சில் நம் உடலின் இறந்த செல்களை எதிர்த்துப் புதுப்பிக்கக் கூடிய பண்பு இருப்பதாலும் மேலும், அடைந்த துளைகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும் வைக்கக் கூடியது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சரும சிவத்தல் மற்றும் அழற்சியைக். குறைத்து சரும ஆரோக்கியத்தை சீராக்குகிறது.
மேலும் ஓட்சில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கக்கூடிய தன்மை உள்ளதால் உடலில் நீரேற்றத்தை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் தோலின் தன்மையை மிருதுவாக்குவதுடன் இயற்கையான பொலிவைக் கொடுக்கிறது. இதனால் தோலின் வறண்ட நிலை நீங்கி ஈரப்பதத்துடன் வைக்கப்படுகிறது.
மேலும், தயிரில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பருக்களை உண்டாக்கக் கூடிய பாக்டீரியாக்களத் தடுக்கிறது. இதனால் தோல் தொற்றுக்கள் இடமிருந்து பாதாகாக்கப் படுகிறது. தயிர் மற்றும் ஓட்ஸ் இந்த இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது தோலின் புத்துணர்ச்சி மற்றும் ஈரத்தன்மை காக்கப்பட்டு தோல் பளபளவென்று ஆக்கப்படுகிறது
ப்ளாக் ஹெட்ஸ் நீங்க
3 டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் பொடித்த ஓட்ஸ், ஒரு சில துளி எலுமிச்சைசாறு மற்றும் சில துளிகள் ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். பத்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இறந்த செல்களை புதுப்பித்தல் மற்றும் நீரேற்றத்துடன் வைக்கும் ஓட்ஸ் மற்றும் பளபளப்பைத். தரக்கூடிய எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயிலின் பண்புகள் இணைந்து சருமத்தில் பொலிவைக் கூட்டுகிறது.
ஓட்ஸ் மற்றும் தயிரை இணைத்துப் பயன்படுத்துவதால் ப்ளாக் ஹெட்ஸ், அரிப்பு இவைகள் நீங்குவதுடன் மென்மையான புத்துண்ர்ச்சியான சருமத்தை அடைவீர்கள்.
இதையும் செய்து பாருங்க தேனும், பட்டையும் உங்கள் அழகை மெருகூட்ட...
தேனில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் புண்களை ஆற்றும் பண்புகள் உள்ளன. இது அழற்சி மைப் போக்கக்கூடியது. பட்டையில் பருக்களைப் தடுக்கக்கூடிய பண்புகள் உள்ளன. 3 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டை பொடி எடுத்துக்கொள்ளுங்கள்.
தேன் மற்றும் பட்டைகள் பொடியையும் சேர்ந்து கலக்கி மைக்ரோ வேவ் அடுப்பில் 20 நொடிகள் வைத்து எடுத்த பின் வெது வெதுப்பாக இருக்கும்போது முகத்தில் பூசி தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இப்படிச் செய்வதால் முகத்தில் உள்ள மாசு மரு நீங்கி பிரகாசமான முகமாக ஆகும். இது இயற்கையான பொலிவைக் கொடுக்கக் கூடியது.