
தலைமுடி ஆரோக்கியத்திற்கு குளிர்காலம் ஒரு கடுமையான பருவமாக இருக்கிறது. குளிர்ந்த, வறண்ட காற்று தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தி முடி உதிர்தலை அதிகரிக்கிறது. அதற்காக குளிர்கால முடி பிரச்னையை போக்கும் 5 நட்ஸ்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. அக்ரூட் பருப்பு:
சுவையான அக்ரூட் பருப்பு என்று சொல்லப்படும் வால்நட்ஸ் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் மூலமாகவும், பயோட்டின் வைட்டமின்களையும் கொண்டுள்ளது . இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதொடு, குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
2. பாதாம்:
பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளதால் இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதோடு சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்ய உதவுகிறது. மேலும் பாதாமில் புரதம், மெக்னீசியம் மற்றும் பயோட்டின் விட்டமின்கள் நிறைந்துள்ளதால் இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. பாதாம் பருப்பை சிற்றுண்டியாக சாப்பிட்டு, உச்சந்தலையில் மசாஜ் செய்ய பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி குளிர்காலத்தில் தலை முடியை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
3. முந்திரி:
முந்திரி துத்தநாகத்தின் நல்ல மூலமாகும், மேலும் முந்திரியில் உள்ள அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு உச்சந்தலையை ஈரப்பதமாகவும் ,வறட்சியை தடுப்பதில் உதவி புரிகிறது. முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்வதால் தலைமுடியை வலுப்படுத்தவும் குளிர்காலம் தொடர்பான முடி உதிர்தலை குறைக்கவும் உதவுகிறது.
4. உலர் திராட்சை:
உலர் திராட்சையில் உள்ள இரும்புச்சத்து முடியை பராமரிக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் உதவி புரிகிறது. மேலும் கடுமையான குளிர்கால வானிலை ஏற்படும்போது சேதத்தில் இருந்து மயிர்க்கால்களை பாதுகாக்கும் ஆக்சிஜனேற்றங்களும் இதில் உள்ளன.
5. ஆப்ரிகாட்:
முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை ஆப்ரிகாட்டில் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின் ஏ உச்சந்தலையில் ஈரப்பதத்தை பராமரிக்கும் இயற்கையான எண்ணெயான சீபத்தை உற்பத்தி செய்யும், அதே நேரத்தில் வைட்டமின்சி மயிர்க்கால்களை வலுப்படுத்தி உடைவதைத் தடுக்கிறது. உணவில் ஆப்ரிகாட்டைச் சேர்ப்பதால் தலைமுடி தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது .
மேற்கூறிய 5 உணவுப் பொருட்களிலும் முடி ஆரோக்கியத்திற்கு தேவையான பண்புகள் நிறைந்துள்ளதால் உணவில் சேர்த்து நிறைவான பலன்களை பெறுவோம்.