அழகுக்கு அழகு சேர்க்கும் 5 எண்ணெய்கள்!

Special Oils for beauty...
beauty tips
Published on

கோடை காலத்தில் சூரிய கதிர்வீச்சுக்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்புக்குள்ளாகும். நோய் தொற்றுகளாலும் சருமத்தில் பிரச்னை உண்டாகும். அதனைத் தவிர்க்க எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்த வேண்டியது அவசியமானது. லாவண்டர். ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை சரும நலனுக்கு ஏற்றது. அவற்றை இப்பதிவில் காண்போம்

1.லாவண்டர் எண்ணெய் 

லாவண்டர் எண்ணெய் பல்வேறு பிரச்னைகளுக்கு விரைவான நிவாரணம் தரும். விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகளைப் போக்கும். இந்த எண்ணெய்யை நுகர்ந்தால் மனஅழுத்தம் கட்டுப்படும்.

2.ரோஸ் மேரி எண்ணெய் 

கோடை காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறும். அவை உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகி விடும். ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணேய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். எண்ணெய்யின் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

3.சந்தனம் எண்ணெய் 

சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். முகப்பரு பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சந்தனத்தூள் செய்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி வரலாம். சருமத்தில் சிவப்புநிற திட்டுக்கள் இருந்தால் அதற்கும் சந்தனத்தூள் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும். வீக்கத்தை குறைக்கவும் உதவும். வெளியே செல்லும்போது சருமத்தில் சந்தன எண்ணெய் தடவலாம்.

4.புதினா எண்ணெய் 

புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது.  வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கிடும். கழுத்துப் பகுதியில் புதினா எண்ணெயை தடவினால் குளிர்ச்சியை உணரலாம்.

இதையும் படியுங்கள்:
ஊற வைத்த கொத்தமல்லி விதையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Special Oils for beauty...

5. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் தக்கவைத்துக் கொள்வதில் ஆலிவ் ஆயிலின் பங்கு அளப்பரியது. ஆலிவ் ஆயிலின் ஊட்டமளிக்கும் பண்புகள் ஆழமாக ஊடுருவி சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், புதினா போன்ற  எண்ணெய்களை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அவைகளுடன்  தேங்காய், ஆலிவ் போன்ற ஏதாவதொரு எண்ணெய்யைக்   பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com