வெயில் கால கருமையா? இந்த இயற்கை வைத்தியங்கள் உங்கள் சருமத்தை மாற்றும்!

விலை உயர்ந்த கிரீம்களுக்கு மாற்றாக, உங்கள் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே சருமத்தை அழகாக்குங்கள்.
சரும பராமரிப்பு
சரும பராமரிப்புAI image
Updated on

சூரியக் கதிர்களால் ஏற்படும் உடல் கருமையை மீட்டெடுக்க பல வழிகள் உள்ளன. இந்த வழிமுறைகள் உங்கள் சருமத்தில் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படுத்தாது.

விரைவான பலன் தரும் சரும பராமரிப்பு முறைகள்

1. எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்பு கொண்டது. இது விரைவாக கருமையை நீக்க உதவுகிறது. இதில் தேனையும் கலந்து உடலில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இறந்த சரும திசுக்களை அகற்ற சிறிது சர்க்கரையையும் சேர்க்கலாம்.

2. சரும பராமரிப்பு முறையில் தக்காளியின் முக்கியத்துவம்

தக்காளியில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகமாக உள்ளன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகின்றன. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்குகிறது. ஒரு பச்சைத் தக்காளியை எடுத்து தோலை நீக்கி அத்துடன் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து கலக்கி கருமையான இடங்களில் பூசி 20 நிமிடங்கள் கழித்துத் கழுவ நல்ல பலன் தெரியும்.

3. வெள்ளரிச் சாறு

கருமை மற்றும் வெயிலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு வெள்ளரி மிக நல்லது. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஒரு வெள்ளரிக்காயை துருவி சாறு பிழிந்து எடுத்து அதை ஒரு பஞ்சு உருண்டையை முகம் மற்ற பகுதிகளில் தடவ வேண்டும். அதை நன்கு உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.‌ சிறந்த நலனைப் பெற இதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

4. கடலைமாவு மஞ்சள்

உடலுக்குச் சிறந்த நிறத்தைக் கொடுக்கக் கூடியது. மஞ்சள்‌ கடலை மாவும் நல்ல நிறத்தை தரும்.‌ மஞ்சள் மற்றும் கடலைமாவு இரண்டும் ஒரு தேக்கரண்டி எடுத்து தண்ணீர் அல்லது பாலுடன் பசையாக ஆக்கி உடல் கருமை பகுதிகளில் தடவவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ சிறந்த பலன் கிடைக்கும்

5. உருளைக்கிழங்கு சாறு

கண்களின் கீழ் கருமையை போக்க இது பயன்படுத்தப்படுகிறது.‌ உருளைக்கிழங்கின் சாற்றைக் பிழிந்து தோலில் தடவி அது உலர்ந்த பிறகு கழுவ வேண்டும்.

சரும பராமரிப்பு
சரும பராமரிப்புAI image

6. தேன் மற்றும் பப்பாளி

பப்பாளியில் உள்ள இயற்கை நொதிகள் சருமத்தை நிறமாக்கும். இவை இறந்த செல்களையும் நீக்கும்‌. தேன் ஈரப்பத்தைத் தருவதுடன் சருமத்தைப் பக்குவப்படுத்தும். இதன் ஆன்டி ஆக்சிடண்டுகள் சருமத்தில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிகல்களை அகற்றுகின்றன. நன்கு பழுத்த இரண்டு பப்பாளியை மசித்து தேன் கலந்து சருமத்தில் தடவிக் கழுவவேண்டும்.

7. மசூர் பருப்பு தக்காளி மற்றும் கற்றாழை

வெயிலால் ஏற்படும் கருமையை சிவப்பு பருப்பு நீக்கும். தக்காளி சருமத்தை பொலிவாக்கும்.‌ கற்றாழை ஈரப்பதத்தை தரும்.‌ இரண்டு தேக்கரண்டி மசூர் பருப்பை ஊறவைக்கவும். அத்துடன் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து தடவி இருந்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

8. ஓட்ஸ் மற்றும் மோர்

ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும்‌ மற்றும் சருமத்தை சுத்தப்படுத்தும். மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக்கி நிறத்தை மேம்படுத்தும்‌. இரண்டு தேக்கரண்டி ஓட்சை நீரில் ஊறவைத்து அத்துடன் இரண்டு தேக்கரண்டி மோர் சிறிது தேன் சேர்க்கவும்‌. இதைக் கலந்து முகம் கை கால்களில் தடவிக் கழுவ புத்துணர்ச்சியான தெளிவான சருமம் கிடைக்கும்.

9. பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி க்ரீம்

ஸ்ட்ராபெர்ரியில் ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள் உள்ளன. மற்றும் இதில் உள்ள சி சத்து இயற்கையாகவே சருமத்தை நிறமாக்கும்.‌ மில்க் க்ரீம் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து மென்மையாக்கும். ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்கு மசித்து அதில் இரண்டு தேக்கரண்டி மில்க் க்ரீம் சேர்க்கவும்‌ இதை சருமத்தில் தடவிக் கழுவ சருமம் பளபளக்கும்.

இதையும் படியுங்கள்:
நீங்க செம ஹேண்ட்சமா மாறணுமா? ஆண்கள் செய்யும் 9 ஆடை, ஸ்டைல் தவறுகளும்... அதற்கான தீர்வுகளும்!
சரும பராமரிப்பு

10. அன்னாசிப் பழக்கூழ் மற்றும் தேன்

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமோலைன் என்ற நொதியானது ஃப்ரீ ராடிகல்களை எதிர்த்து அழற்சியைக் குறைக்கும்.‌ மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை புற ஊதா கதிர்களால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும். ஜந்து அன்னாசி பழத்துண்டுகளை அரைத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சருமத்தில் தடவிக் கழுவ வேண்டும்.

11. சந்தனப் பசை

சந்தனப்பௌடருடன் ரோஸ் வாட்டர் கலந்து இந்த பேஸ்டை உடலில் தடவிக் கழுவ, கருமை நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

12. பேகிங் சோடா

ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் நீர் சேர்த்து சருமத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவ கருமை நீங்கும்.

இதையும் படியுங்கள்:
4 நிமிடத்தில் ரெடியாகும் சூப்பர் ட்ரிக்... உங்க சுருட்டை முடி நேராக இத பண்ணுங்க!
சரும பராமரிப்பு

13. ஆல்மண்ட் ஆயில் மற்றும் பால்

ஆல்மண்ட் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து உள்ளதால் சருமத்தை மென்மையாக்கும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆயிலில் பால் சேர்த்து சருமத்தில் தடவிக் கழுவ கருமை நீங்கும்.

இந்த வீட்டு வைத்திய முறைகள் மூலம் உங்கள் சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகி, எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி உங்கள் சருமம் இயற்கையான நிறத்துடன் மின்னத் தொடங்கும்.

logo
Kalki Online
kalkionline.com