நீங்க செம ஹேண்ட்சமா மாறணுமா? ஆண்கள் செய்யும் 9 ஆடை, ஸ்டைல் தவறுகளும்... அதற்கான தீர்வுகளும்!

உங்கள் கம்பீரமான தோற்றத்தை பாழாக்கும் சின்ன சின்ன ஸ்டைல் தவறுகளை இப்படி ஈஸியாக சரிசெய்யலாம்.
ஸ்டைல் தவறுகள்
ஸ்டைல் தவறுகள்AI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ண்கள் தங்களது ஆடை மற்றும் தோற்றத்தில் (grooming) செய்யும் சில பொதுவான ஸ்டைல் தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.

1. ஆடைகளில் ஆண்கள் செய்யும் பொதுவான ஸ்டைல் தவறுகள் (ill-Fitting Clothes):

மிகவும் தளர்வான (Baagy) அல்லது இறுக்கமான ஆடைகள் உங்களின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பாழாக்கி விடும். இது உடலமைப்பை குண்டாகவோ அல்லது தோற்றப் பொலிவற்றதாகவோ காட்டும். தோள்பட்டை மற்றும் இடுப்பு அளவுக்கு கச்சிதமாகப் பொருந்தும் (Fit) உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் உடலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது உங்கள் கம்பீரத்தை உயர்த்தும்.

கோட் அல்லது பிளேசர் (Blazer) அணியும்போது அதன் அனைத்து பட்டன்களையும் போடக்கூடாது. குறிப்பாக கடைசி பட்டனை எப்பொழுதும் கழற்றியே வைத்திருக்க வேண்டும்.

2. காலணிகளில் ஒளிந்திருக்கும் ஸ்டைல் தவறுகள் (Ignoring footwear):

ஃபார்மல் உடைகளுக்கு விளையாட்டுப் பிரியர்கள் அணியும் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை அணிவது, அழுக்கான, தேய்ந்துபோன அல்லது சந்தர்ப்பத்திற்குப் பொருந்தாத காலணிகளை அணிவது போன்றவை பெரிய தவறாகும். எவ்வளவு விலையுயர்ந்த உடை அணிந்திருந்தாலும், காலணி பொருந்தாமல் இருந்தால் ஒட்டுமொத்த ஸ்டைலும் கெட்டுவிடும். நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு ஸ்னீக்கர்ஸ், லோஃபர்ஸ் அல்லது ஃபார்மல் லெதர் ஷூக்களைப் பயன்படுத்தலாம். சுத்தமாக பராமரிக்கப்பட்ட காலணிகள் மற்றும் ஷூக்களை தேர்ந்தெடுத்து அணிய நல்ல தோற்றம் (லுக்) கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
லட்சக்கணக்கில் செலவு பண்ணாதீங்க.. கொரியன் பொண்ணுங்க பியூட்டி சீக்ரெட் இதோ!
ஸ்டைல் தவறுகள்

3. அளவுக்கு அதிகமாக ஆக்சஸரீஸ் அணிவது (Over Accessorizing):

பெரிய வாட்ச், பல மோதிரங்கள், தடிமனான செயின்கள், கைகளில் அதிகப்படியான வளையல்கள் அல்லது பிரேஸ்லெட்டுகள் என அனைத்தையும் ஒரே நேரத்தில் அணிவது உங்கள் தோற்றத்தை மிக மோசமாகக் காட்டி அசிங்கப்படுத்திவிடும். மிகக் குறைந்த அதே சமயம் தரமான மற்றும் உங்கள் உடைக்குச் சற்றே பொருத்தமான ஆக்சஸரீஸைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. எளிமையே அழகு என்பதை மறக்க வேண்டாம்.

4. சுருக்கமான அல்லது கசங்கிய ஆடைகளை அணிவது (Wrinkled Clothes):

நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தாலும், அதில் சுருக்கங்கள் இருந்தால் அது அலட்சியமான தோற்றத்தைத் தான் தரும். எனவே ஆடைகளை முறையாக அயர்ன் செய்து அல்லது ஸ்டீம் செய்து அணிவது சிறப்பு. சுருக்கங்கள் நிறைந்த அல்லது கறைகள் படிந்த ஆடைகளை அணிவது உங்கள் ஆளுமையைக் குறைக்கும்.

ஸ்டைல் தவறுகள்
ஸ்டைல் தவறுகள்AI Image

5. பொருந்தாத நிறங்கள் மற்றும் பேட்டர்ன்கள் (Mismatching Colours):

ஒன்றோடு ஒன்று பொருந்தாத நிறங்களை அல்லது கோடுகள்(stripes) மற்றும் கட்டங்களை (checks) கவனக்குறைவாக மிகைப்படுத்தி அணிவது பார்க்க நன்றாக இருக்காது. நியூட்ரல் (Neutrals) எனப்படும் அடிப்படை நிறங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளைத் தேர்ந்தெடுக்கப் பழகவும். ஒரே நேரத்தில் டாப் மற்றும் பாட்டம் இரண்டையும் மிகப் பிரகாசமான (பிரைட் கலர்) வண்ணங்களை அணிவது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. ஒரு அடர் நிற ஆடைக்கு (dark colour) மற்றொரு ஆடை லேசான நிறத்தில் (light colour) இருப்பது நல்லது.

6. பெல்ட் மற்றும் ஷு நிறம்:

ஃபார்மல் ஆடைகள் அணியும்பொழுது கருப்பு நிற ஷுவிற்கு பழுப்பு நிற பெல்ட் அணிவது உடையில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தி, ஸ்டைல் பற்றிய கவனமின்மையைக் காட்டும். எப்போதும் பெல்ட் மற்றும் ஷுவின் நிறம் மற்றும் லெதர் வகை போன்றவை ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஷுக்களுக்கு அணியும் சாக்ஸ் நிறம் மற்றும் நீளம் சரியாக இல்லாவிட்டால் அது ஒட்டுமொத்த அழகையும் குறைக்கும். எப்போதும் பேண்ட் அல்லது ஷூ நிறத்திற்கு ஏற்ப சாக்ஸ் தேர்ந்தெடுக்கவும். ஷார்ட்ஸ் அல்லது ஃபார்மல் ஷுக்களுக்கு வெள்ளை நிற சாக்ஸ் அணிவதை தவிர்ப்பது நலம்.

7. உள்ளாடைகள் வெளியே தெரிவது:

சட்டையின் மேல் பட்டன்களை கழற்றும்போது உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளியே தெரிவது தோற்றத்தின் நேர்த்தியைக் குலைத்துவிடும். சட்டையின் காலருக்கு வெளியே தெரியாதவாறு டீப் வி-நெக் பனியன்களைப் பயன்படுத்தலாம்.

8. சீராக இல்லாத தாடி மற்றும் முடி:

ஒழுங்கமைக்கப்படாத தாடி, நீண்ட மூக்கு முடிகள் மற்றும் வெட்டப்படாத நகங்கள் நேர்த்தியான தோற்றத்தைக் கெடுத்து விடும். தாடியை சரியாக ட்ரிம் செய்யாமல் கழுத்துப் பகுதியில் வளரவிடுவது மோசமான தோற்றத்தைத் தரும். வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தாடி மற்றும் முடியை ட்ரிம் செய்வது நல்லது. அதேபோல் முக அமைப்பிற்குப் பொருந்தாத ஹேர்ஸ்டைல் அல்லது எண்ணெய் வழியும் தலைமுடியும் தோற்றத்தைக் கெடுக்கும்.

இதையும் படியுங்கள்:
இரவு நேரத்தில் தலையில் எண்ணெய் வைக்கலாமா, கூடாதா? இதோ தெளிவான விளக்கம்!
ஸ்டைல் தவறுகள்

9. அளவுக்கு அதிகமான வாசனை திரவியங்கள்:

பெர்ஃப்யூம் அல்லது பாடி ஸ்ப்ரேயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது அருகில் இருப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும்.

இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உங்களின் தினசரி ஆடைத் தேர்வில் இருக்கும் குறைபாடுகள் நீங்கி, அலுவலகமாக இருந்தாலும் சரி, நண்பர்களின் சுபநிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, எங்கும் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள். உங்கள் மீதான சுயமதிப்பு உயர்வதோடு, உங்களைப் பார்க்கும் பிறருக்கு உங்கள் ஆளுமையின் மீதான மரியாதையும், ஈர்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com