இந்திய ஆண்களின் ஸ்டைல் என்றாலே ஒரு தனி அழகுதான். பாரம்பரியமான வேட்டி, குர்தா, நவீன ஜீன்ஸ், டி-ஷர்ட் என ஒவ்வொரு ஆடையிலும் இந்திய ஆண்கள் தங்கள் சொந்த ஸ்டைலை உருவாக்கிக் கொள்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு எப்படி ஸ்டைலாக இருப்பது என்பதைப் பற்றி தெரிவதில்லை. இந்தப் பதிவில் இந்திய ஆண்கள் ஸ்டைலாகத் தெரிய என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.
உடல்வாகு மற்றும் இடத்திற்கு ஏற்ற ஆடையை தேர்வு செய்யுங்கள்: ஒரு நபர் ஸ்டைலாகத் தெரிய வேண்டுமானால், அவரது உடல்வாகு மற்றும் நிறத்திற்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உடல்வாகு இருக்கும். சிலருக்கு மெல்லிய உடல், சிலருக்கு தசை நிறைந்த உடல், சிலருக்கு குண்டான உடல் இருக்கும். இதேபோல், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான நிறமும் இருக்கும். இந்தக் காரணிகளை கருத்தில் கொண்டு ஆடைகளை தேர்வு செய்வதன் மூலம் சிறப்பான ஸ்டைலை பராமரிக்கலாம்.
வெஸ்டர்ன் ஃபேஷனை சரியாக பயன்படுத்துதல்: இப்போது வெஸ்டர்ன் ஸ்டைல் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஜீன்ஸ், டீ சர்ட் போன்ற மேற்கத்திய உடைகளை இந்திய ஆண்கள் அதிக அளவில் அணிகின்றனர். இந்த மேற்கத்திய உடைகளை இந்திய பாரம்பரிய உடைகளுடன் இணைத்து அணிவதன் மூலம் ஒரு புதிய ஸ்டைலான தோற்றத்தை உருவாக்கலாம். உதாரணத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் உடன் குர்தா அணிவது, டீசர்ட் உடன் வேட்டி அணிவது போன்றவை புதிய லுக்கை உங்களுக்குக் கொடுக்கும்.
Accessories: ஆண்கள் தங்களின் ஸ்டைலை பராமரிக்க சரியான ஆபரணங்களை அணிய வேண்டும். கைக்கடிகாரம், சன் கிளாஸ், பெல்ட் பர்ஸ் போன்ற விஷயங்கள் ஒரு நபரின் ஸ்டைலை மேம்படுத்த உதவும். இந்திய பாரம்பரிய ஆபரணங்கள் போன்ற கைக்கடிகாரங்கள், மோதிரங்கள், செயின் போன்றவற்றை அணிந்தால், பாரம்பரிய தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கலாம்.
தலைமுடி மற்றும் தாடி: தலைமுடி மற்றும் தாடி ஒரு நபரின் தோற்றத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. தலைமுடியை சரியாக வெட்டி, தாடி வைத்துக் கொள்வதன் மூலம் ஒரு நபரின் முகம் மேலும் பிரகாசமாக இருக்கும். ஒரு நபரின் முகவடிவம், முடி வகைக்கு ஏற்றவாறு தலைமுடியை வெட்டி தாடி வைத்துக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: நீங்கள் ஸ்டைலாக தெரிவதற்கு உடை மற்றும் அணிகலன்களைத் தாண்டி நீங்கள் பிட்டாக இருக்க வேண்டியது அவசியம். பார்ப்பவர்களுக்கு நீங்கள் ஸ்டைலாகத் தெரிய, உடல் தகுதியை பராமரிப்பது மிகவும் முக்கியம். தவறான உணவுப் பழக்கங்கள் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது ஒரு நபரின் தோற்றத்தை பாதிக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், தொடர்ச்சியான உடற்பயிற்சி ஒரு நபரின் உடல் தகுதியை மேம்படுத்தி அவரை ஸ்டைலாகக் காட்டும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து முயற்சித்து நீங்கள் உங்களின் தனித்துவமான ஸ்டைலை உருவாக்கிக் கொள்ள முடியும். இது வெறும் ஃபேஷன் என்பதையும் கடந்து ஒரு நபரின் நம்பிக்கை மற்றும் பண்பை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாகும் என்பதால், இந்திய ஆண்கள் இதில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.