பிள்ளைகளின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு அவசியமாகும் உடற்பயிற்சி!

பள்ளி குழந்தை உடற்பயிற்சி
இளம் குழந்தைகள் உடற்பயிற்சி
Published on

னைவர் குடும்பத்திலும் குழந்தைகள் நூறு சதவிகிதம் செல்லங்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியம், மனதிடம் அனைத்தும் பெற்றிட, குழந்தை பருவத்திலேயே அவர்களின் உடல் நலனில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்தான்.

வளர்ந்த பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும்தான் உடற்பயிற்சி என்றில்லை. குழந்தைகள் வளரும்போதே உடற்பயிற்சியை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளும் வளர்ந்தவர்களைப் போன்றே நாளின் இறுதி நிலையில் மதிய வேளைகளில் சோர்வை உணர்கிறார்கள்.

குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமான வீட்டுப் பாடங்களாலும், புத்தக சுமையாலும் நாளின் பிற்பகலில் அதிக சோர்வை எதிர்கொள்கிறார்கள். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க குழந்தைகளும் உடற்பயிற்சி செய்யலாம். அப்படி செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்துதான் இப்பதிவில் தெரிந்துகொள்ள உள்ளோம்.

1. மழலை குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியமா?​: குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகள் அதிகரிப்பது நல்லது.

தவழும் குழந்தைகள்: அடிப்படையிலான விளையாட்டுக்களை ஊக்குவித்து நாள் ஒன்றுக்கு பல முறை உடல் இயக்கம் தூண்டுவதை உடற்பயிற்சியாகவே இருக்க வேண்டும். 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட உடல் செயல்பாடு செய்ய கவனம் செலுத்துங்கள்.

6 முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 60 நிமிடங்கள் உடல் செயல்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் பல்வேறு விதமான உடல் செயல்பாடுகளை செய்யும்போது அதிசயிக்கத்தக்க வகையில் ஆரோக்கிய நன்மைகள் மேம்படும்.

2. பள்ளி குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தரும் நன்மைகள்:​ பள்ளி ஒன்றில் தினசரி வகுப்புக்கு முன்பு 25 முதல் 30 நிமிடங்கள் வரை குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்வதை ஊக்குவித்தனர். இதனால் குழந்தைகள் வகுப்பில் ஆற்றலுடன் மேம்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. குழந்தைகள் உடற்பயிற்சி செய்வது அவர்களது சுயமரியாதையை மேம்படுத்தியது.

3. குழந்தைகள் என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம்?: குழந்தைகளுக்கான விளையாட்டு வகுப்பில் 3 வித உடற்பயிற்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

பள்ளி குழந்தை உடற்பயிற்சி
பள்ளி குழந்தை உடற்பயிற்சி

endurance: கடினமான ஒன்றை நீண்ட நேரம் செய்யும் திறன். ஓட்டம் என்பது கூட சகிப்புத்தன்மையின் சோதனையே.

strength: விளையாட்டு மைதானத்தில் கம்பிகளை நட்டு தாவ சொல்லுவார்கள். இது வலிமையை அதிகரிக்கக் கூடியவை.

Flexibility: இது மிக மிக சாதாரணமான பயிற்சி குனிந்து நிமிரச் செய்வார்கள். நெகிழ்ச்சி தன்மையை ஊக்குவிக்கும் பயிற்சியில் இதுவும் ஒன்று. இதனால் வேலைகளின் தன்மைக்கேற்ப வளைந்து செயல்படும் மனப்பான்மை அதிகரிக்கும்.

இந்தப் பயிற்சிகள் குழந்தைகளுக்கு சகிப்புத்தன்மையை உண்டுபண்ணும். குழந்தைகளுக்கு ஏரோபிக் உடல்பயிற்சி என்பது கூடைப்பந்து. சைக்கிள் ஓட்டுதல், வரி சறுக்கு, கால்பந்து, நீச்சல், டென்னிஸ், நடைபயிற்சி, ஓடுதல், ஜாகிங் போன்றவற்றை சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியின் பிறப்பிடமாக விளங்கும் நன்றி உணர்வின் மேன்மைகள்!
பள்ளி குழந்தை உடற்பயிற்சி

4. குழந்தைகள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?​: குழந்தைகள் தினசரி சுறுசுறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்த பெற்றோர்களும் உடன் துணை இருக்க வேண்டும். உடற்பயிற்சியில் யோகாவும் செய்யலாம்.பள்ளி வயது மற்றும் பதின்ம வயது பிள்ளைகள் தினமும் 60 நிமிடங்கள் வரை மிதமான அல்லது தீவிரமான உடல் செயல்பாடு செய்யலாம். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்ய வேண்டும்.

5. தசை வலுவூட்டல் பயிற்சி அவசியம்: மழலை குழந்தைகள் தினசரி அவசியம் 3 மணி நேரம் மிதமான மற்றும் தீவிர செயல்பாடுகள் செய்ய வேண்டும். கட்டமைக்கப்படாத சுறுசுறுப்பான இலவச விளையாட்டு மற்றும் திட்டமிடப்பட்டவை இருக்க வேண்டும். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாளில் 3 மணி நேரம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். விளையாட்டு, ஓடுதல், துள்ளுதல், நடனமாடுதல் என இருக்கலாம். குழந்தை நீண்ட நேரம் உடல் செயல்பாடு இல்லாமல் இருக்கக் கூடாது. உங்கள் வீட்டுப் பிள்ளைகளை எதிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இப்பொழுதே அதற்கான முயற்சியில் இறங்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com