
பெரும்பாலான பெண்கள் சரும பொலிவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உதட்டின் நிறத்திற்கு தருவதில்லை. அதற்கு காரணம் லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் என செயற்கை வண்ணங்களை உதட்டில் பூசுவதால்தான். இதற்குரிய காரணம். இந்த செயற்கை நிறமூட்டிகளால் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் சாப்பிடும்போது உணவு பொருட்களுடன் சேர்த்து நமது உடலுக்குள் செல்வதால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க இயற்கையான முறையில் உதட்டின் கருமை நிறத்தை நீக்குது எப்படி? என்பதை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு சாறு
புதியதாக இருக்கும் உருளைக்கிழங்கு தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி சாறு எடுத்துக்கொண்டு சுத்தமான பஞ்சை இந்த சாறில் நனைத்து உதட்டின் மீது இரவு படுக்க செல்லும் முன் தடவி வந்தால் ஐந்து வாரங்களில் நல்ல மாற்றத்தை நிறத்தை காணலாம். உருளைக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ பி மற்றும் வைட்டமின் சி இருப்பதால் உதட்டின் கருமையை நீக்குவதில் உருளைக்கிழங்கு முக்கிய பங்காற்றுகிறது. உருளைக்கிழங்கின் சாறு கருமையான அடர் நிறத்தை மாற்றி உதட்டிற்கு நல்லநிறத்தை கொடுக்கிறது.
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி அல்லது துருவி சாறு எடுத்து இரவில் படுக்கச் செல்லும் முன் இந்த சாற்றை உதட்டின் மீது தடவி வரலாம். ஒரு மாதத்தில் மென்மையாக உதட்டின் நிறத்தை நீங்கள் பெறுவது உறுதி. இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்கச் செய்யும் பண்பு பீட்ரூட் சாறில் இருக்கிறது. இது உதட்டின் மீது இருக்கும் கருமை நிறத்தை குறைத்து உதட்டின் நல்ல நிறத்தை அதிகரிக்க செய்கிறது.
எலுமிச்சை - சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சர்க்கரையில் நனைத்து அதை உங்கள் உதட்டின் மீது மென்மையாக ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து செய்து வந்தால், ஒரு சில வாரங்களில் உதட்டில் நல்ல மாற்றங்களை பெறமுடியும்.
சர்க்கரை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுவதோடு அற்புதமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக்கொண்டு உள்ளதால் சிறந்த இயற்கை பொருளாக அறியப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து எடுத்து, இந்த பொடியை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது பூசி காய்ந்ததும் கழுவவும். இதை வாரம் மூன்று முறை செய்துவர மூன்று வாரங்களில் நல்ல நிறத்தை கொடுக்கும் தன்மை இதற்கு உண்டு. உதட்டின் மேற்பகுதியின் அடர் நிறத்தை குறைத்து பட்டுபோன்ற உதடுகளை பெறச்செய்கிறது.
மஞ்சள் மாஸ்க்
தக்காளி மற்றும் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தக்காளிச்சாறு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும் .இதை வாரம் மூன்று முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை தரும்.
மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. அதனுடன் நிறத்தை அதிகரிக்க கூடிய எலுமிச்சை சுருக்கத்தை தடுக்க பயன்படும். தக்காளியை சேர்க்கும்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு மென்மையான ரோஜா இதழ் உதடுகளை பெறச் செய்யும்.
இந்த மூன்றும் உதட்டின் கருமை நிறம் மறைந்து நல்ல நிறம் கொடுக்கும்.