
தலைமுடி வளர்ச்சிக்கு hyaluronic அமிலம் மற்றும் க்ளிசரின் போன்றவை முடியை வறட்சியைப் போக்கி நீரேற்றமாக வைக்கும். தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க ஊம் 5 சீரம் களைப் பற்றிப் பார்ப்போம்.
ஆலோவேரா தேங்காய் எண்ணெய் சீரம்
இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல், ஒரு டேபிள் ஸ்பூன் எக்ஸ்ட்ராவெர்ஜின் தேங்காய் எண்ணெய், மற்றும் 4 சொட்டுக்கள் ரோஸ்மேரி ஆயில் எடுத்துக்கொள்ளவும். ஆலோவேரா மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு ப்ளெண்டரில் கலக்கவும். அல்லது நன்றாக மென்மையாகும் வரை கலக்கவும். இதில் ரோஸ்மேரி ஆயில் கலந்து ஒரு குடுவையில் சேர்த்து ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும் உங்கள் .முடியை அலசி பிறகு டவலால் துடைத்து சிறிது ஈரம் இருக்கும்போது இந்த சீரகத்தைப் தடவுங்கள். இது முடிக்கு இயற்கையான பளபளப்பு தரும்.
ரோஸ் வாட்டர் க்ளிசெரின் சீரம்
மூன்று டேபிள்ஸ்பூன் ரோஸ்மேரி ஆயில், 1 டேபிள் ஸ்பூன் க்ளிசெரின் மூன்று சொட்டுக்கள் வைட்டமின் ஈ ஆயில். இவைகளை எடுக்கவும். ஒரு குடுவையில் ரோஸ் வாட்டர் க்ளிசெரின் சேர்க்கவும். அதில் ஈ ஆயில் சேர்த்து நன்றாக குலுக்கும். உங்கள் தலைமுடியை ஷாம்பு வால் வாஷ் செய்து டவலால் நன்கு தலையை துடைத்த பிறகு இந்த சீரத்தை விரல்களால் முடிக்கும் தடவ வறடாசி நீங்கும்.
க்ரீன் டீ, ஆலோவேரா சீரம்
கால் கப் க்ரீன் டீ டிகாக்ஷன், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல், ஒரு டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் டீ டிகாக்க்ஷன் ஆலோவேரா மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். மென்மையாக ஆகும்வரை கலக்கவும். இதை ஃப்ரிட்ஜ் ஜில் வைக்கலாம். உங்கள் முடியை ஷாம்பூவில் அலசிய பிறகு டவலால் நன்கு முடியை துடைத்த பிறகு இந்த சீரகத்தை விரல்களால் முடியில் தடவவும் இது முடியை நீரேற்றமாக வைக்கும்.
அவகேடோ, ஆல்மண்ட் ஆயில் சீரம்
இரண்டு டேபிள்ஸ்பூன் நன்கு பழுத்த அவகேடோவை மசித்து வைக்கவும், ஒரு டேபிள் ஆல்மண்ட் ஆயில் 5 சொட்டுக்கள் லாவெண்டர் ஆயில் எடுக்கவும். நன்கு மசித்து அவகேடோவை ஆல்மண்ட் ஆயிலில் சேர்க்கவும். இதில் லாவெண்டர் ஆயில் சேர்க்கவும். அவகேடோ சீக்கிரமே ஆக்சிடைஸ் ஆகிவிடும் அதனால் இந்த சீரத்தை உடனே முடியில் கடைசி வரை தடவுங்கள். அதன் சத்துக்கள் முடியில் சேர்ந்து 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு அலசலாம்.
செம்பருத்தி ஆலிவ் ஆயில் சீரம்
5 செம்பருத்தி பூக்கள், இதை கழுவி பேஸ்ட் ஆக்கிக் கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் செம்பருத்தி பேஸ்ட் சேர்த்து கலக்கவும். இதை சிறிது சூடுபடுத்தி உங்கள் முடி சிறிது ஈரமாக இருக்கும்போதே தடவி அரைமணி நேரம் கழிதாது ஷாம்பூ போட்டு அலசவும். இது முடிக்கு நல்ல பளபளப்பைத்தரும்.
மேற்கூறிய சீரம்களால் உங்கள் முடி நீரேற்றம் ஆகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.