சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க 5 டிப்ஸ்!

Black skin
Black skin
Published on

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களுடைய அழகினை மேம்படுத்த பலவகையான அழகு குறிப்புகளை பின் பற்றி வருகின்றனர். அதிலும் சரும அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் கை கால்களில் உள்ள கருமையை கவனிக்க தவறவிடுகின்றனர். சிலருக்கு உடலின் சருமம் வெள்ளையாக இருந்தாலும், கைமுட்டி, கால்முட்டி, முழங்கால் முட்டிகள் கருமையாக இருக்கும். இந்த கருமை எவ்வளவு தேய்த்து குளித்தாலும் மறைய வைப்பது கடினமாக இருக்கும். இந்த கருமையை எப்படி சரி செய்வது என்று இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

கருமைக்கு காரணம்

குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து வந்ததும், கை முட்டிகளை மேசைகளில் மீது ஊன்றி வைப்பதும் என முட்டிகளுக்கு நாம் அறியாமல் கொடுத்த அழுத்தங்கள் இந்த கருமையை மேலும் அதிகரித்திருக்கும். இவை தவிர உடலில் வைட்டமின் பி 12 பற்றாக்குறையும் கூட கருமையை அதிகரிக்க காரணமாக அமையும். குழந்தைப்பருவத்திலேயே உரிய பராமரிப்பு இல்லாத சூழலில் இதை நிரந்தரமாக நீக்க முடியாது என்றாலும், இந்த இடம் மேலும் கருப்பாகாமல் இருக்கவும் அவை குறையவும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். 

டிப்ஸ் 1 : சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர ஒரு வாரத்திலே நல்ல பயனை அடைய முடியும்.

டிப்ஸ் 2 : ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள். பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு கை மற்றும் கால் முட்டிகளில் மீது நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்:
இளம் பெண்களுக்கு ஏற்ற பத்து வகையான லெக்கின்ஸ் மாடல்கள்!
Black skin

டிப்ஸ் 3 : சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறைந்த பகுதியில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சில நாட்களில் கருமை நிறம் மாறுவதை நீங்களே உணர முடியும்.

டிப்ஸ் 4: ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 5: கடுகு எண்ணெய் சருமத்தில் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு புத்துணர்வு ஊட்டுகிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி கை மற்றும் கால் மூட்டுகளில் தினமும் இரவு நேரங்களில் மசாஜ் செய்துவிட்டு மறுநாள் குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நிறம் மாறும். கடுகை பொடியாக்கி பசும்பாலுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

இது போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தும் போது உங்கள் சருமத்திற்கு எது உகந்ததோ அதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com