இளம் பெண்களுக்கு ஏற்ற பத்து வகையான லெக்கின்ஸ் மாடல்கள்!

leggings...
leggings...Image credit - pixabay
Published on

ளம் பெண்களின் விருப்ப உடையாக இருப்பது லெக்கின்ஸ். அதில் 10 வகையான லெகின்ஸ் மாடல்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. கால் வரை நீண்ட லெக்கின்ஸ்;

பொதுவான லெக்கின்ஸ் மாடல் இது. பலவகையான வண்ணங்கள் மற்றும் பிரிண்ட்களில் கிடைக்கிறது. குர்த்திகளுக்கு இந்த வகையான லெக்கின்ஸ் ஏற்றது. இவற்றை உடற்பயிற்சி செய்யும் போதும் சாதாரண பயணங்களின் போதும் அணிந்து கொள்ளலாம்.

2. முழங்கால் வரை நீண்ட லெக்கின்ஸ்

முழங்கால் வரை நீளமுள்ள லெக்கின்ஸ்களை யோகா செய்யும் போதும் நடை பயணத்தின் போதும் அணிவதற்கு பொருத்தமான உடையாகும். நெகிழ்வான எலாஸ்டிக் அமைந்திருப்பதால் அணிவதற்கு வசதியாக இருக்கும். இவை தனித்துவமான பிரண்டுகள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன. இவற்றுடன் டேங்க் டாப்ஸ் உடன் அணியலாம். 

  காப்ரி (Capri)  லெக்கின்ஸ்...
காப்ரி (Capri) லெக்கின்ஸ்...Image credit - pixabay

3.  காப்ரி (Capri)  லெக்கின்ஸ்

ஷார்ட் லெக்கின்ஸ் வகையைச் சேர்ந்தவை. முழங்காலுக்கு சற்று கீழே கணுக்காலுக்கு சற்று மேலே இருக்குமாறு அமைந்திருக்கும். பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. எளிமையான தோற்றம் காரணமாக அன்றாட அணிவதற்கு ஏற்றது நவ நாகரிக டேங்க் டாப்புகள் மற்றும் பேகி டி-ஷர்ட்களுடன் அணிய ஏற்றவை. கல்லூரி அலுவலகம் போன்ற இடங்களுக்கு அணிந்து செல்லலாம். 

4. மிட் காஃப் லெக்கின்ஸ் 

ஹாஃப் லெக்கின்ஸ் என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது ஃபேஷனபிளாக இருக்கும். சசுடிதார்களுடன் அணிய ஏற்றது. டேங்க் டாப்புகள் உடன் அணிந்து கொண்டு ஜிம்மிற்கு செல்லலாம். இதில் எலாஸ்டிக்கால் ஆன பெல்ட் உள்ளதால் இடுப்பை விட்டு நகராமல் இருக்கும்.

Stirrup லெக்கின்ஸ்
Stirrup லெக்கின்ஸ்Image credit - pixabay

5. Stirrup லெக்கின்ஸ்;

குதிரை சவாரி செய்யும் வீரர்கள் அணியும் உடையாக இருந்தது. இதை அணிந்திருக்கும் போது பூட்ஸ்களின் மேலே ஏறாது. பனிச்சறுக்கு, குதிரை சவாரி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளுக்கு சரியான தேர்வாக அமையும். மேலும் ஃபேஷனபிளாகவும் இருக்கும். நடன நிகழ்ச்சிகளுக்கு அணிந்து சென்றால் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும்

6. விளையாடும்போது அணியும் Athleisure லெக்கின்ஸ்;

இது ஒரு ஸ்டைலான ஆடை ஆகும். ஜிம்மிற்கு செல்லும் போது அல்லது வெளியில் கடைகளுக்கு செல்லும் போது, வீட்டில் ஓய்வெடுக்கும் போதும் இதை அணிந்து கொள்ளலாம் இது ஸ்பான்டெக்ஸ் மற்றும் பாலிஸ்டர் கலவையால் ஆனது அதனால் வியர்வையை நன்றாக உறிஞ்சக்கூடியது

7. பாக்ஸ் (Faux – leather) லெதர் லெக்கின்ஸ்

இது பார்ப்பதற்கு ஃபேஷனபிளாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இது போலியான தோலால் செய்யப்பட்டது. சரியான மேலாடை அணியும் போது பார்ப்பதற்கு ஆடம்பரமான தோற்றத்தை தரும்

8. ஃபுட் லெக்கின்ஸ்

இந்த வகையான உடை கால் பாதத்தை மூடுவது போல அமைந்திருக்கும். குளிர்காலத்தில் அணிய ஏற்றது இது. கனமான பொருளால் செய்யப்படுவதால் இது குளிரை நன்றாக தாங்கும்.

இதையும் படியுங்கள்:
ரோஸ்மேரி எண்ணெய்யின் பயன்கள் என்னென்ன தெரியுமா?
leggings...

9. (Rugged leggings) முரட்டுத்தனமான லெக்கின்ஸ்;

முரட்டுத்தனமான தோற்றத்தை உடைய உடையை அணிய விரும்பினால் இந்த வகையான லெக்கின்ஸ் மிகப் பொருத்தமாக இருக்கும். இது மிகவும் மெல்லிய மற்றும் வழவழப்பான பொருள்களால் செய்யப்பட்டது . ஆனால் பார்ப்பதற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கும். கல்லூரி மற்றும் சாதாரண நிகழ்வுகளுக்கு அணிந்து செல்லலாம்

10. கம்பளி லெக்கின்ஸ்;

பார்ப்பதற்கு ஸ்டைலாக மட்டுமல்ல அணிவதற்கும் வசதியானது குளிர்காலங்களில் இதமாக வைத்திருக்கும். ப்ளேசர்கள் மற்றும் ஸ்வட்டர்களுடன் அணியும் போது பார்க்க அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com