தலைமுடி வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய 5 தாவர வகைகள்!

Keshavarthini plant, Old man's hair plant, Horsetail plant, Bhringraj, Karuveppilai
Keshavarthini plant, Old man's hair plant, Horsetail plant, Bhringraj, Karuveppilai
Published on

1. கேசவர்த்தினி தாவரம்

கேசவர்த்தினி அதன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஹெபடோடாக்ஸிக் எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. கல்லீரல் நோய்கள், முடி உதிர்தல், மற்றும் தோல் கோளாறுகள், போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மூலிகை மருத்துவத்தில் பொதுவாக உதவியாக இருக்கும். கேசவர்த்தினி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றது. மற்றும் ஆயுர்வேத முடி எண்ணெய்களில் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும்.

2. முதியோர் கூந்தல் தாவரம்

அம்பு முனை போன்ற இலைகளை கொண்டது. மணல் தரையில் வளரும் 2 மீட்டர் வரை வளரக்கூடிய கொடித் தாவரம் ஆகும். முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு, இளநரை ஆகியவற்றை நீக்கும். கண்களுக்கு குளிர்ச்சியை தந்து கண் பார்வை தெளிவடையும். ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இடுப்பு வாதம், மூட்டு வலி, மூலக் கடுப்பு, நாவறட்சி போன்றவற்றை குணமாக்கும்.

3. குதிரைவாலி தாவரம்

இதன் இலையில் உள்ள உயர் சிலிக்கா அளவு தலைமுடியின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியமாக பங்கு வகிக்கிறது. முடியின் கொழுப்பு, மற்றும் எலாஸ்டினின் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் வலிமையையும், தடிமனையும் மேம்படுத்தி முடி உதிர்வது குறைக்க உதவுகிறது. மேலும் சிலிக்கா முடி கொட்டுகளை (Hair follicles) தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் முடிகொட்டுகளுக்கு சென்று நன்றாக வளர உதவுகிறது. குதிரைவாலி இலையில் உள்ள இயற்கை ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் உயிரணு பாதுகாப்பு கூறுகள் தலையின் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன. முடி வளர்ச்சிக்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கி விநியோகமும், ஊட்டச்சத்துக்களும் சரியான முறையில் கொட்டுகளுக்கு செல்ல உதவுகிறது.

4. கரிசலாங்கண்ணி (Bhringraj)

இது இயற்கையாகவே முடி உதிர்வது குறைத்து ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இது முடி எண்ணெய், ஷாம்பு, ஹேர் மாஸ்க் போன்ற தயாரிப்புகளில் சேர்த்து முடி வேர்களை வலுவாக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தலையின் ஈரக் கூறுகளை ஊக்குவித்து முடி உதிர்வது குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முடிவேர்களுக்கு எட்டுகிறது. நரை முடியை குறைத்து இயற்கையான முடி நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.

5. கருவேப்பிலை

கருவேப்பிலையின் இயற்கை உயிரணு பாதுகாக்கும் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களை வலுவாக்கி முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செல்களில் உள்ள களஞ்சியங்களை மேம்படுத்தி முடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யும். தேங்காய் எண்ணெயோடு கலந்து அதை தலையில் மசாஜ் செய்யும் போது தலைமுடிக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.

நாமும் இந்த தாவரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பாதுகாப்போம்.

இதையும் படியுங்கள்:
தாவர உணவுகளின் மகத்துவம் தெரியுமா?
Keshavarthini plant, Old man's hair plant, Horsetail plant, Bhringraj, Karuveppilai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com