தாவர உணவுகளின் மகத்துவம் தெரியுமா?

Do you know the greatness of plant foods?
Vegetables
Published on

சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில்தான் சத்தும், ஆற்றலும் அதிகம் என்பது பரவலான நம்பிக்கை. அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருகிறவர்கள் பலசாலிகள் என்று ஒரு கருத்தும் உண்டு. ஆனால் அறிவியல் பூர்வமாக மனித உடலுக்கு பொருத்தமான உணவாக சைவ உணவுகளையே சுட்டிக்காட்டுகின்றனர்.

அசைவ உணவுகளில் உள்ள கொழுப்புச்சத்தும், கொழுப்பு அமிலங்களும்தான் இதய நோய்கள், ரத்த அழுத்த நோய்கள் மற்றும் கண் தொடர்பான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்கிறார்கள். அசைவ உணவுகளில் 60 சதவீதம்  உடலுக்கு பயனுள்ள நல்ல சத்தான பொருட்கள் உள்ளன. ஆனால் 40 சதவீதம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களும் உள்ளன. மேலும் அசைவப் பொருட்கள் வயிற்றில் அமிலத்தன்மையை உண்டாக்கி வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

உலகெங்கிலும் தற்போது 2 மில்லியன் மக்கள் ஆரோக்கியமற்ற உணவுகளையே சாப்பிட்டு வருவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவைகளை நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள் மற்றும் பருப்புகள் அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோனால்டு.

தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் 10 சதவீதம் பக்கவாத நோய்களில் இருந்து தப்பிக்கலாம், அதோடு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய்கள் மற்றும் சில புற்றுநோய் ஆபத்துகளிலிருந்தும் தப்பிக்கலாம் என்கிறார். தாவர உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் 30 சதவீதம் நச்சு வாயு பரவுவதை தடுக்கலாம், 40 சதவீதம் காடுகளின் வனவிலங்குகள் அழிவை தடுக்கலாம், 40 சதவீதம் தரிசு நிலங்களை மேம்படுத்தலாம், 20 சதவீதம் துரித மரணங்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்கிறார் தன் ஆய்வுகள் மூலம்,

தாவர உணவுகளை அதன் இயற்கை தன்மை மாறாமல் பிரஷாக சாப்பிடுகிறவர்களுக்கு வேறு மருந்தே தேவையில்லை. முக்கியமாக 500 வகையான தாவர உயிர்க்கூறுகள் உள்ளன. இவைகளை "பைட்டோ கெமிக்கல்" என்கிறார்கள். இவைகள்தான் நோய்களை எதிர்க்கும் மூலப்பொருட்கள். எனவே ஒரே காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடாமல் தினமும் வேறு வேறு காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டால் பல்வேறு வகையான தாவர உயிர்க்கூறுகள் நன்கு கிடைக்கும். பாகற்காய், கத்திரிக்காய், சோயா, திராட்சை, தக்காளி, ஆப்பிள் போன்றவற்றில் தாவர உயிர்க்கூறுகள் அதிகமுள்ளது.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் - வெள்ளை பூரி ரெசிபிஸ்!
Do you know the greatness of plant foods?

ஒவ்வொரு காய்கறிகள் அல்லது பழங்களின் அவற்றின் நிறங்களை தீர்மானிப்பதில் பல்வேறு காரணிகள் இடம் பெறுகின்றன. அவைகளுக்கு நிறங்களைக் கொடுக்கும் "பைட்டோ நியூட்ரான்கள்" தான் அவைகளுக்கு சத்தையும் தருகிறது என்கிறார்கள். எனவே கலர்புல்லான காய்கறிகள் மற்றும் கனிகளை சாப்பிடும் மனிதர்களுக்கு அந்த பைட்டோநியுட்ரின்கள் பலதரப்பட்ட நாள் பட்ட நோய்களிலிருந்தும், புற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது அவற்றின் தோலோடு சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

அதிகளவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் சாப்பிடும் பெண்களின் செல்கள் தாமதமாகவே மூப்படைகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரத உணவுகள் மிகவும் அவசியமாகும். அசைவ உணவு வகைகளில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. ஆனால் தாவர உணவுகளில் கிடைக்கும் புரதச்சத்து மிகவும் நல்லது என்கிறார்கள் டெக்சாஸ் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள். குறிப்பாக சோயா உணவுகளில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது. நாள் தோறும் உணவுகளில் 25 கிராம் சோயாவை சேர்த்துக் கொண்டால் இதயம் தொடர்பான நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, எலும்பு பலவீனம் போன்றவைகளை தவிர்க்கலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com