
பரபரப்பான வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களான ஆண்கள் வேலை, ஓட்டம், பணம் என அதனைச் சுற்றியே வருவதால் தங்களை அழகாக வைத்துக் கொள்ள நேரம் இல்லாமல் போகிறது. அந்த வகையில் ஆண்களை என்றென்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் 6 டிப்ஸ் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சரும பராமரிப்பு (Skincare Routine)
ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை தினமும் இரண்டு முறை கழுவ வேண்டும். பின்பு ஈரப்பதமூட்டும் கிரீம் சியாபாட்டோல் கொண்ட மாய்ச்சரைசர் பயன்படுத்துவதோடு, வெளியே செல்லும்போது தடுப்புக் கிரீமை தவறாமல் உபயோகித்து சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
2. உணவில் கவனம்
முட்டை, சால்மன் மீன், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் கொலாஜன் அதிகம் இருப்பதால் இவற்றை எடுத்துக் கொள்வதோடு குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் தயிர், கிம்சி, இட்லி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். அதோடு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் தக்காளி, காரட், பச்சை இலைக் காய்கறிகளை தவறாமல் டயட்டில் சேர்த்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.
3. உடல் பராமரிப்பு
தினசரி உடலைப் பாதுகாக்க ஸ்ட்ரெந்த் ட்ரெய்னிங் மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகள் தவறாமல் செய்வதோடு, தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் புஷ்-அப்ஸ், புல்-அப்ஸ் செய்யவும். இதுதவிர இரவு 11 மணிக்குள் படுத்து 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்தால் உடல் பராமரிப்பு அற்புதமாக இருக்கும்.
4. மன அழுத்தம் குறைப்பது
தினமும் 10 நிமிடம் தியானம் செய்து மனதை அமைதிப்படுத்துவதோடு, மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகரிக்க நண்பர்களுடன் நேரம் செலவழித்து, வேடிக்கையான செயல்களில் ஈடுபடுவது மன அழுத்தம் குறைய உதவும்.
5. வாழ்க்கை முறை மாற்றங்கள்
புகைப்பழக்கம், மது ஆகியவை தோல் முதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் இதனை தவிர்த்து விட வேண்டும். தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதோடு முகம் மற்றும் தாடிக்கு எண்ணெய் பயன்படுத்தி மிருதுவாக வைத்திருங்கள். வாரம் இருமுறையாவது சரும பிரகாசத்தை அதிகரிக்கச் செய்யும் தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்கை அப்ளை செய்யுங்கள். ஆலிவ் ஆயில் மசாஜ் செய்தால் சரும இறுக்கம் குறையும்.
6. எதை தவிர்க்க வேண்டும்?
இளமை என்பது வெளி தோற்றத்தை மட்டுமல்ல உள் ஆரோக்கியத்தையும் சார்ந்தது என்பதால் அதிக சர்க்கரை மற்றும் பாக்கெட் உணவுகளை தவிர்ப்பதோடு, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையைப் போக்கி எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். நாம் சீரான வாழ்க்கை முறையோடு ஒழுக்கமாக இருந்தால் வயதானாலும் நமது தோற்றம் என்றென்றும் இளமையாக இருக்கும்.
மேற்கூறிய 6 வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க ஆண்களும் எப்போதும் இளமையாக இருப்பது உறுதி.