ஆண்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் 10 வாழ்க்கை முறைகள்!

Lifestyles for men that are harmful to health
Lifestyles for men that are harmful to health
Published on

வ்வொருவரும் தங்களது உடலை கோயிலைப் போல பேணிக் காக்க வேண்டும் என்பார்கள். நீங்கள் உங்கள் உடலை மோசமாக நடத்தினால், அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், குறிப்பாக உங்கள் உடற்தகுதியை பாதிக்கும். உங்கள் வாழ்க்கை முறை தவறுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், உடற்தகுதியையும் கெடுக்கும் தவறான கீழ்காணும் 10 பழக்கங்களை அறிந்து, அதனை விலக்கி வைத்திருப்பது சிறந்தது.

மோசமான தோரணை: உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடற்தகுதிக்கும் சரியான தோரணையில் உட்கார்வது மிகவும் முக்கியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உங்கள் தசைகள் வலிமை பெறும் மற்றும் நல்ல தோரணையை எளிதாகப் பராமரிக்க உதவும். நீண்ட நேரம் தவறான நிலையில் அமர்ந்து வேலை பார்க்கும் இளைஞர்களுக்குதான் பின்னாளில் முடக்கு வாதம் அதிகம் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

காலை உணவைத் தவிர்ப்பது: காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். இது அன்றைய நாளுக்கான மிக முக்கியமான உணவாகும். எனவே, காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றல் குறைந்து . நீங்கள் சோர்வாகவும் உணரலாம். காலை உணவைத் தவிர்ப்பதால் வளர்சிதைமாற்றம் சரிவர நடப்பதில்லை. மேலும், இன்சுலின் செயல்பாடும் முடக்கப்படுகிறது என்கிறார்கள் இந்தியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகமாக போன்களைப் பயன்படுத்துதல்: நீங்கள் எந்தளவிற்கு செல்போன்களை உபயோகப்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு அது உங்களின் தூக்கம், உங்களின் நினைவு திறன், உங்கள் வேலை செய்யும் ஆற்றல், செயல் திறன் மற்றும் பிரச்னைகளை தீர்க்கும் ஆற்றல் என அனைத்தையும் பாதிக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் கனெக்டிகட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

அதிகப்படியான காபி மற்றும் தேநீர்: அதிகப்படியாக காபி, டீ குடித்தல் நீரிழப்பு, நடுக்கம் மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். நான்கு கப்பிற்கு மேல் சாப்பிடுகிறவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு 60 சதவீதம் அதிகரிப்பதாக ஐரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி ஆய்வு கூறுகிறது.

மோசமான தூக்க பழக்கம்: தவறான நேரத்தில் தூங்குவதும், விழிப்பதும் உங்கள் உடலுக்கு மிகவும் மோசமான விளைவுகளை தரும். ஏனெனில், இது உங்கள் தூக்க சுழற்சி, உங்கள் சர்க்காடியன் ரிதம், உங்கள் ஹார்மோன்கள் சுரப்பது தொடர்பான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.பின்னாளில் வரும் ஓவ்வொரு நோய்களுக்கும் ஆரம்ப காலத்தில் நீங்கள் சரிவர தூங்காதது ஒரு காரணமாக அமைகிறது என்கிறார்கள் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

லேட் நைட் ஸ்நாக்கிங்: ஆரோக்கியமற்ற உணவுகளை தாமதமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் இறுதியில் நீரிழிவு நோய்க்கு காரணமாகும். இரவில் தாமதமாக சாப்பிடுவது தொடர்ந்தால் அவர்கள் விரைவில் இதய நோய்களை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்கிறார்கள் துருக்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
Lifestyles for men that are harmful to health

உடற்பயிற்சியை தவிர்த்தல்: உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, தசைகள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களைத் தவிர்க்கவும், உங்கள் ஆயுளை அதிகரிக்கவும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று. அதனை தவிர்க்காதீர்கள்.

மோசமான நீரேற்றம்: போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நீங்கள் சோர்வாகவும், ஆற்றல் குறைவாகவும் இருப்பதை உணரலாம். உடலில் நீர்ச்சத்து குறைவதுதான் அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகிறது என்கிறார்கள் வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

மன அழுத்தம்: மன அழுத்தம் உங்கள் ஆற்றலை பாதிப்பதோடு, உங்கள் உந்து சக்தியையும் பாதிக்கிறது. மேலும், இது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற உடல் நல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

ஜங்க் ஃபுட் சாப்பிடுவது: ஜங்க் ஃபுட் உடல் பருமன், மோசமான இதய ஆரோக்கியம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நீங்கள் விரும்பாத பிற நாள்பட்ட நோய்களுடன் நேரடியாக தொடர்புடையது. வெளியில் சாப்பிடும் ஜங்கிள் புட்களில் ‘பாதலேட்’ எனும் ரசாயனம் உருவாகிறது. இது ஆண்களிடம் மலட்டுத்தன்மையை உருவாக்குகிறது என்கிறார்கள் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com