இயற்கையான பொலிவுக்கு கேரட் - பீட்ரூட்: வீட்டிலேயே செய்யக்கூடிய 6 எளிய டிப்ஸ்!

For a natural glow
For a natural glow
Published on

கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய இரண்டும் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தவை. இவற்றை வைத்து நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய 6 சிறந்த அழகு குறிப்புகள் இதோ:

முகம் ஜொலிக்க - Instant Glow pack:

பீட்ரூட்டில் உள்ள 'பீட்டாலைன்ஸ்' (Betalains) சருமத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தைத் தரும். சமஅளவு கேரட் மற்றும் பீட்ரூட் சாறு எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ இது முகத்தில் உள்ள சோர்வை நீக்கி உடனடி பொலிவைத்தரும்.

கருவளையங்கள் நீங்க - Dark circles Remedy:

கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க இது ஒரு சிறந்த மருந்து. கேரட் சாறு மற்றும் பீட்ரூட் சாற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சொட்டு பாதாம் எண்ணெய் கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களை சுற்றி லேசாக மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடலாம்.

உதடு சிவப்பாக - Pink lips scrub:

உதடுகளில் உள்ள கருமை நீங்கி மென்மையாக அதற்கு துருவிய பீட்ரூட் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் தேன் கலந்து உதட்டில் மென்மையாக தேய்க்கவும். இது இறந்த செல்களை நீக்கி உதடுகளை இயற்கையாகவே சிவப்பாக மாற்றும்.

பீட்ரூட் சாற்றுடன் சிறிதளவு கிளிசரின் கலந்து உதட்டு சாயமாக தடவினாலும் கவர்ச்சியாக காணப்படுவதுடன் வேறு பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.

பருக்கள் மற்றும் தழும்புகள் மறைய - Acne Marks:

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள தழும்புகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கேரட்டை வேகவைத்து மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக்கழுவவும். வாரத்திற்கு இருமுறை எப்படி செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.

இதையும் படியுங்கள்:
நிமிடங்களில் மாறும் லுக்! - எந்த முக அமைப்பிற்கு எந்த வகை கொண்டை அழகு?
For a natural glow

இளமைத் தோற்றத்திற்கு - Anti-Aging juice:

தினமும் காலையில் ஒரு கேரட் மற்றும் அரை பீட்ரூட் சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் ரத்தத்தை சுத்திகரித்து சருமம் சுருக்கங்கள் இன்றி இளமையாக இருக்க உதவும்.

பீட்ரூட் சாறு பயன்படுத்தும்போது சருமத்தில் லேசான சிவப்பு நிறம் படியும். இது தற்காலிகமானதுதான் பயப்படத் தேவையில்லை.

சரும வறட்சிக்கு கேரட் மற்றும் பீட்ரூட் தீர்வு;

வறண்ட சருமத்திற்கு கேரட்டை வேகவைத்து மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் தடவ கேரட்டில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தின் செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

பீட்ரூட் சாற்றுடன் காய்ச்சாத பால் கலந்து முகத்தை துடைத்து எடுத்தால் சருமம் வறட்சியின்றி ஜொலிக்கும்.

இதுபோல் சமையலுக்கு பயன்படுத்தும் கேரட், பீட்ரூட்டை அதிகமாக வாங்கி தினசரி பயன்படுத்தி அழகினை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com