6 Simple Tips to Make Conch Neck Shine!
beauty neckImages credit - pixabay

சங்கு கழுத்து பளிச்சிட 6 எளிய டிப்ஸ்!

Published on

முகத்தைப் போலவே கழுத்தையும் கச்சிதமாக பராமரிக்கலாம். கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தை நீக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.

கைகளால் கழுத்தில் அலர்ஜி ஏற்பட்டு கருமை நிறம் இருந்தால் பால், தேன், எலுமிச்சைசாறு சமஅளவில் கலந்து கழுத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊறவிட்டு, பின் வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நிறம் மறையும்.

பாசிப்பருப்பு மாவில், ஆலிவ் எண்ணெய், பன்னீர் சமஅளவு கலந்து பசை போல ஆக்கி கழுத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவவும். கருமை நிறம் நாளடைவில் மறையும்.

க்காளியை நன்கு மசித்து அதில் சிறிது எலுமிச்சைசாறு கலந்து கழுத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி வாரம் மூன்று முறை செய்தால் கழுத்து மினு மினுப்பும் நிறமும் பெறும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான முறையில் தழும்புகளுக்கு டாடா சொல்லுங்க!
6 Simple Tips to Make Conch Neck Shine!

முல்தானி மிட்டியில், பன்னீர், கிளிசரின்  கழுத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். கழுத்தின் கருமை நிறம் நீங்கி சுருக்கமும் வராமல் தடுக்கும்.

ரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் இது அனைத்தும் கலந்து பசை போல பிசைந்து கருமை பகுதியில் பூசி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் நன்கு ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் ஒருமுறை இதனை செய்து வர கழுத்து பளிச்சென மாறும்.

கோஸை அரைத்து, சாறு எடுத்து அதில் சிறிது தேன் அல்லது எலுமிச்சைசாறு கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் கருமை நிறம் மறையும்.

logo
Kalki Online
kalkionline.com